Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 3

 பாம்பே டைம்ஸ் - பாகம் 3


வாசகர்களே... ஒரு சின்ன flash back...


இந்த கதை நடந்த வருஷம் 1994! அதுக்கு ஒரு 8 வருஷத்துக்கு முன்னாடி, 1986வேதி அத்த & குடும்பம் மெட்ராஸ்ல ஒரு வாரம் எங்க கூடதங்கியிருந்தாங்ககண்ணன் அப்போ Dubai இருந்ததால வரலஆனாஅவர்அண்ணா வாசு வந்திருந்தார்அப்போ நான் பத்தாங்க்ளாஸ்எதுக்குமே leave போடாத என்ன, leaveனு சொன்னாலே எரிஞ்சு விழற எங்க அப்பா அம்மாஉலகஅதிசயமாஎன்ன leave போட்டுட்டு வேதி அத்தஅத்திம்பேர்வாசு அண்ணாமன்னிகுழந்தைகளோட மகாபலிபுரத்துக்கு அனுப்பி வச்சாங்கஅப்பாவுக்கும்அம்மாவுக்கும் office. அக்கா college போயே ஆகணும்என் தம்பியும் நானும்கட்டாயமா விருந்தோம்பல்ல கலந்துக்கணும்அந்த கால கட்டத்தில இது ஒருபெரிய Disney போரதுக்கு சமம்என் தம்பி எப்போடா school bunk பண்ணலாம்னுகாத்திக்கிட்டு இருப்பான்எனக்கோ அரைமனசு!


வாசு அண்ணா அவர் அன்ப நெறய தின்பண்டம் வாங்கி தந்து எங்களுக்குகாமிச்சார்இதான் சாக்குன்னுகுச்சி ஐஸ்க்கேஎங்க வீட்ல காய விட்டுகண்ணல காட்ற கால கட்டத்துலவாசு அண்ணா உபயத்திலவெட்கமேஇல்லாமநானும்என் தம்பியும் பல்லி மிட்டாய்லேர்ந்து, chocobar வரைக்கும்எல்லாத்தையும் ஒரே நாள்ல தின்னு தீர்த்தோம்


கதைக்கு திரும்ப வருவோம்...


பாம்பே station இறங்கிஇந்த சினிமால எல்லாம் காட்றா மாதிரி ஆன்னுவாயப்பொளந்து எல்லாம். Rather, அதுக்கெல்லாம் நேரமில்லஒரேகுறிக்கோள்... கண்டிய பார்த்த உடனே பொட்டிய எல்லாம் தூக்கிண்டுநாங்ககண்ணு மண்ணு தெரியாம ஓடணும்


10 நிமிஷம், 4 கண்கள்கண்டியின் வரவை நோக்கி ஆவலோடு இங்கும் அங்கும்அலைப்பாய்ந்தன... பார்க்கர ஒரு ஒரு ஒல்லியாவெள்ளையா இருந்தஆளெல்லாம் கண்டியா இருக்குமோன்னுநித்யாவும்நானும் பெண்களுக்கேஉரித்தான அச்சம்மடம்நாணம்பயிர்ப்பு எல்லாத்தையும் விட்டுட்டு (இருந்தாதானே விட முடியும்?), தேடினோம்ஊஹூம்கண்டிய காணோம்


என்ன செய்யலாம்னு யோசிச்சிண்டே இருக்கும்போதுவாசு அண்ணாவோட ஒருyounger version எங்கள நோக்கி மின்னல் வேகத்துல வந்துரொம்ப தீர்மானமா, “காயத்ரிநித்யா, hi, come let us go home” அப்பிடின்னு ஒரு கண்டிப்பும் அன்புமாஎங்க luggage  எல்லாம் தூக்க ஒரு கூலியோட வந்துஎங்க பதிலுக்குகாத்துக்கிட்டு இருக்காமாமுன்னாடி நடக்க ஆரம்பிச்சிட்டார்


திருதிருன்னு முழிச்சிக்கிட்டுநாங்கஅவர் பின்னாடி போலாமவேண்டாமான்னுயோசிக்கறதுக்குள்ளஅவர் நிந்துஎங்கள திரும்பி பார்த்து என்னன்னுகேக்கறதுக்குள்ளகண்டஅவசர அவசரம், tie  கழட்டிண்டேஎங்க பக்கமாஓடி வரதுஎங்களுக்கு வந்த பிரமாதமான கோவத்த கட்டுப்படுத்திண்டுநான்அந்த ப்ரம்மஹத்திய கண்ணா அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி வெச்சேன். “அண்ணா, this is our colleague Ganti. Ganti, this is my...brother... cousin”. கொஞ்சம் பொது நலனெல்லாம் விசாரிச்சிட்டுதயங்கிதயங்கி, “அண்ணாகண்டி எங்கள guest houseக்கு கூட்டிண்டு போகதான் வந்திருக்கான்...” அண்ணாஉடனே குரல கொஞ்சம் உசத்திபாம்பே தமிழ் ஒரு பாலக்காடு வாடைடோட, “என்னஅப்பா உங்கிட்டச்சொல்லலையாஎன்னத்துக்காக்கும் guesthouse? ஆஹ்??”  நான் சத்தியமா பயந்துட்டேன், “இது என்னடா இது... நம்பஅப்பாவோட கறாரா இருக்கே!” 


கண்டிக்கு ஒரு மண்ணும் புரியலஎல்லாத்தையும் நித்யா translate பண்ணினாகண்ட உடனே, “Very good. Stay there for a couple of days. If you are uncomfortable, shift to the guest house” அப்பிடின்னு அபத்தமா சொல்லித்துஅண்ணா மறுபடியும் என்ன மொறைக்கநான், “சரிண்ணாஒரு 2 நாள்உங்கக்கூட இருக்கோம்அப்பறம் guest houseக்கு போயிடறோம்உங்களுக்குஎதுக்கு தொந்தரவு?” இந்த அளவுக்கு நான் கொழஞ்சதில்ல


என்ன அவர் தீர்க்கமாஅவரோட பூனக்கண்ணால பார்த்துட்டுநடக்கஆரம்பிச்சிட்டார்கண்டி எங்க ரெண்டு பேர்க்கிட்டேர்ந்து திட்டுவாங்கப்போறோமேன்னு பயந்துண்டுகுடு குடுன்னு அண்ணா பின்னாடியேஓடிப்போய்என்ன கேட்டுதுன்னு தெரியுமா??


(தொடரும்)

No comments: