பாம்பே டைம்ஸ் - பாகம் 9
என்னடா இது! பாம்பே போல ஒரு நவநாகரிகமான நகரத்துல பொறந்துவளர்ந்து, துபாய் போல பல நாடுகளப்பார்த்த கண்ணா அண்ணா என்னிக்கும்இல்லாத மாதிரி, பாவாடச்சட்ட போட்டதுக்கு இப்பிடி கத்தறார்னு, நானும் தான்கொஞ்சம் குழம்பினேன். அப்பறமா மன்னிதான் அண்ணா கிட்ட தனியா போய்கேட்டுட்டு வந்து, சிரிச்சிண்டே சொன்னா, “நம்ம இப்போ போற இடத்தில (fair) giant wheel இருக்கும். நீ அதுல இந்த மாதிரி dress எல்லாம் போட்டுண்டு போனாநன்னா இருக்காது. பொறுக்கி பசங்க எல்லாம் வருவா! ஏதானும் ஏடாகூடமாஅவா comment பண்ணுவாளோன்னு தான் அண்ணா பயப்படறார். உன் கிட்டசொல்ல தயங்கறார்” னு. மன்னி சொல்லி முடிக்கல எனக்கு, என்னையும் அறியாமஅண்ணா மேல இருந்த அன்பும், பாசமும் பல மடங்கா உயர்ந்தது. அண்ணாக்களால மட்டும் தான் தங்கைகளுக்காக இவ்வளவு கவலப்பட முடியும்! அந்த நிமிக்ஷம் நான் நெனச்சது, “ இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும்கண்ணா அண்ணா தான் எனக்கு அண்ணாவா பிறக்கணும்! What a beautiful soul!!
ரொம்ப ஆர்வமா படிக்கிற நேயர்களுக்கு - அன்னிக்கு நான் அந்த dress ல தான்fairக்கு போனேன். ஆனா, அண்ணா கவலப்படக்கூடிய எந்த விஷயமும் செய்யல. எவ்வளவு சவால் விடற நான், எப்படி இவர் அன்புக்கு கட்டுப்பட்டேன்!
அப்போ எனக்கும், ஜெயனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஜெயன்Malaysia வுல இருந்தார். அப்போ தினமும் phone boothக்கு நான் போய் அவரக்கூப்பிட்டு பேசுவேன். இல்ல அவர் வீட்டு நம்பருக்கு phone பண்ணுவார். அண்ணாஎன்ன நல்லா கிண்டல் செய்வார். ஒரு நாள், ஏதேச்சியா என்ன கேட்டார், “உனக்கு சமைக்கத் தெரியுமா?” ன்னு. நான், “இல்லண்ணா! எனக்கு சமையல்லinterestஏ இல்ல” அப்பிடின்னேன். அன்னிலேர்ந்து தினமும், “ஜெயஶ்ரீ! இஸ்கோகுச் சிக்காயோ யார்” மன்னிக்கு உபதேசம். கூடவே என் கிட்ட, “நீ ஒண்ணும்சமைக்கல்லேன்னா உன் ஜெயட்டா என்ன சாப்பிடுவார்?” அப்போவே அண்ணாகவலப்பட ஆரம்பிச்சுட்டார் அவரோட வருங்கால மாப்பிள்ளைக்காக!
வாரக்கடைசில மன்னியோட Dadarல நெறய shopping!
நடுவில ஒரு 4 நாள் எங்க ரெண்டு பேரையும் நாஸிக், ஷீர்டி வேற கூட்டிக்கிட்டுroad trip போனாங்க. அங்க ஒரு ரெண்டு நாள் நிம்மி ்அக்கா வீட்ல டேரா!!
எனக்கும் நித்யாவுக்கும் மாத்தி மாத்தி பூனா போயாகணும்னு ஆனப்போ, நாங்கபோயிட்டு ஆர்த்தர் 12 மணிக்கும் 1 மணிக்கும் வரும்போது, வேதி அத்த, எங்களுக்காக தயிர் சாதம் கலந்து வெச்சிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்க! இந்தகாலத்துல யாராவது செய்வாங்களா? அதுவும் மருமாளுக்கும், அவகூட்டாளிக்கும்? என்ன நாங்க கொடுப்போம் அவங்க அன்புக்கு இணையாக?
இது மாதிரி 3 மாசம் போனதே தெரியல! ஏன்டா திரும்பி Madras போறோம்னுஇருந்தது. But all good things must come to an end! அது மாதிரி, எங்க பாம்பேவாசமும் ஜனவரி மாசம், பொங்கலுக்கு முன்னாடி ஒரு முடிவுக்கு வந்தது! பிரியவேமனசில்லாம அத்தைக்கும், அண்ணாவுக்கும், மன்னிக்கும் “bye bye” சொல்லிட்டு, பாம்பேயோட பசுமையான நினைவுகளை சுமந்துண்டு, Madrasக்குதிரும்பினோம்!
(முற்றும்)
பி. கு. 1: வேலைக்கு போனீங்களே அதுல ஏதாவது கத்துக்கிட்டீங்களான்னு சிலர்கேக்கறது என் காதுல விழறது! Of course!!
பி. கு. 2: அத்த குடும்பத்த தவிர, அவங்க வீட்டுக்கு வெளியே, நானும் நித்யாவும்அடிச்ச லூட்டிப்பத்தி எழுதினா இன்னும் நாலு பாகமாவது தேவப்படும். வாசகர்கள் நலம் கருதி அதெல்லாம் எழுதல.
பி. கு. 3: என் கதைல வந்த எல்லா கதாப்பாத்திரங்களும் இப்போ எங்கன்னுசொல்ல ஆவல். அதுக்கு இன்னும் ஒரு கொசுறு பாகம் அப்பறமா எழுதறேன்!
நன்றி!!!
No comments:
Post a Comment