Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 4

 பாம்பே டைம்ஸ் - பாகம் 4


அண்ணா பின்னாடியே ஓடிப்போன கண்டி பின்னாடி நித்யாவும்நானும் ஓட்டமும்நடையுமா போனோம்கண்டி அசடு வழிஞ்சிண்டேஅண்ணா கிட்டஅவர் வீடுஎங்கேனு முதல்ல விசாரிச்சுதுஅவரும் ரொம்ப இயல்பா, Worliனு சொன்னார்உடனேகண்டி, “ எங்க office போற வழில தான். Dadarஅப்பிடியேஎன்னையும் வழில drop பண்ணிடறீங்களா?” ன்னு வெட்கமே இல்லாமகேட்டுட்டு,இதுவே ஒரு taxi கைக்காட்டிநிறுத்திமுன் சீட்ல போய்உட்காரவும் செஞ்சுஎங்க மானத்த ஒரேடியா வாங்கித்துநித்யாவும்நானும்எங்க பல்ல நறநறன்னு கடிச்சதுஅந்த ஜென்மத்துக்கு புரிஞ்சுதானே தெரியலநானே pile on. நித்யா ஏற்கனவே எக்கசக்க சங்கோஜி... இதுக்கு நடுவுல இவன்வேற...


அண்ணா எங்க பொட்டி எல்லாம் boot வெச்சுட்டுஅதுங்கிட்ட போய், “You sit with the girls at the back” னு சொல்லிஅதயும் ஏத்திண்டு கெளம்பினோம்எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலவெளில வேடிக்க பார்க்கற சாக்குலகொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே பாம்பேய ரசிச்சேன்அப்பப்போ, “அது என்னஇடம்?, இது என்ன இடம்னு அண்ணாக்கிட்ட பேச்சு குடுக்கறதுக்காககேட்டுக்கிட்டு வரும் போதுகண்டிநடுவுல நடுவுல பூந்துவிளக்கவுரை வேறஅவன் ஏதாவது பேசினாலேநானும் நித்யாவும்அவன எறிச்சிடற மாதிரிபார்ப்போம்ஒரு வழியா அத Dadar office இறக்கிவிட்டுட்டுநாங்க Worliக்குகெளம்பினோம்


வழில அண்ணா கிட்ட எவ்வளவோ hint குடுத்தேன்எங்களுக்கு எவ்வளவுசங்கடமா இருக்குநாங்க எவ்வளவு கஷ்டம் குடுக்கறோம்இத்யாதிஇத்யாதிஇத்யாதி... அண்ணா ஒண்ணும் சரியா பதிலே சொல்லலமறுபடியும்உச்சஸ்தாயில, “நீ வந்து ஒன் அத்த கிட்ட ச்சொல்லிட்டு என்ன வேணுமோபண்ணிக்கோயேன்என் கிட்ட என்னத்துக்காக்கும் ச்சொல்றாய்?”


Worli வந்து Jamboori Maidan கிட்ட அண்ணா taxi driver கிட்ட left திரும்பச்சொன்னார்ஒரு colonyக்ககுள்ளஒரு பழைய அடுக்கு மாடிகட்டடத்துக்கு முன்னாடி, taxi நின்னுதுநான் taxiக்கு பணம்கொடுக்கப்போனேன்மறுபடியும் அண்ணா குரல உசத்தி, “உங்காத்துல உனக்குமரியாதயேச் சொல்லித்தரலியா?! எப்பிடி பெரிவா இருக்கும்போது நீ உன்purse  எடுக்கலாம்உள்ள போ! 3rd floor. அத்த காத்திண்டு இருப்பா” ன்னுஅதட்டிட்டு, taxiக்கு பணம் கொடுத்திட்டு, luggage எல்லாம் எடுத்திண்டு உள்ளபோறோம்எனக்கு கண்ல தண்ணியே வந்திருச்சுநம்ம செலவு நம்மபார்த்துக்கணும்னு நெனச்சாஇவர் இப்பிடி திட்றாரே... அத்தய பார்த்ததும்ன்னு கட்டிண்டு அழனும் போல இருந்துதுஅடக்கிண்டுநாத்தழுக்க, “சௌக்கியமாஅத்த?” ன்னு மட்டும் தான் கேட்க முடிஞ்சுது


அத்த பார்க்கறதுக்கு ஒரு சின்ன size MS மாதிரி இருப்பாபாங்கா ஒரு ஆறு கஜபுடவைலமூக்கு இரண்டு பக்கமும் குத்திபள பளன்னு வெள்ள கல் பதிச்சமூக்குத்திஅழகா நெத்தில பெரிய குங்குமம்தன்னோட தும்பப்பூ தலமுடிலசின்னதா ஒரு கொண்டஅகலமான அழகான வரவேற்க்கர சிரிப்புஇனிமையும்எளிமையான சுபாவம்குரல் மட்டும் தான் கொஞ்சம் சின்னதும் பெரிசுமா வரும். Easy அத்த கிட்ட தாஜா பண்ணிஇப்பவே ஒரு இரண்டு அவர்ல கிளம்பிடனும்


அப்போ தான் கவனிச்சேன்அத்தைக்கு பின்னாடிஅழகா பளிச்னு சிரிச்சிண்டுஇரட்ட நாடிலஆஜானுபாஹுவா, salwar kameez போட்டுண்டுஒரு 30-32 வயசுலஒரு பெண்நான் இதுவரைக்கும் பார்த்ததில்லஆனாஎங்கக்கா இவள பத்திபேசியிருந்தாகெளம்பறதுக்கு முன்னாடி, Madrasஎங்கப்பா எங்கள வேதிஅத்த ஆத்துல தங்கணும் கட்டாயப்படுத்தினப்போநான் ரொம்ப பிடிவாதம்பிடிச்சேன். “எனக்கு அவா யாரையுமே தெரியாதுஸ்டேஷன்ல கண்ணா அண்ணாவந்தாக்கூட எனக்கு அடையாளம் தெரியாதுஉனக்கு வேணா உங்க அக்காஉசத்தியா இருக்கலாம்நான் comfortable  feel பண்ண வேண்டாமாஅதுவும்மாசம்!!” இதுக்கு எங்கக்கா சொன்னா, “நீ அங்க போஅங்க ஜெயஶ்ரீ மன்னிகண்ணா அண்ணா wife இருப்பாரொம்ப நல்லவ. You will really like her. ரொம்ப பிரமாதமா சமைப்பா. She will be great company for you!” இதெல்லாம்என் மனசுல வந்திட்டு போச்சுஇது தான் மன்னியா? Ok. 


அறிமுகமெல்லாம் ஆன அப்பறம்மன்னி கேட்ட முதல் கேள்விஅதுக்குஎங்களுக்கு கிடைச்ச நல்ல பதில்தங்கினா இனிமேஇந்த 3 மாசம் அவங்கவீட்ல தான் தங்கணும்னு நாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில தீர்மானிச்சஅந்த கேள்வி.... நாளை!


(தொடரும்)

No comments: