பாம்பே டைம்ஸ் - பாகம் 1
வேலைக்கு போக ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருஷத்தில, எங்க கம்பனில என்ன பாம்பே போகச்சொல்லி கேட்டாங்க. நானும், என் தோழியும், சக பணியாளினியும்ஆன நித்யாவும் போக ஏற்பாடாச்சு. Office லேயே தங்க இட வசதி எல்லாம் செஞ்சு கொடுத்திட்டாங்க. என் friend ரொம்ப பயந்தா...ரொம்ப தயங்கினா... “நம்ம ரெண்டு பேருக்கும் அனுபவம் இல்ல. எப்படி சமாளிப்போம்? யாராவதுஒருத்தராவது நல்ல ப்ராஜக்ட் விஷயம் தெரிஞ்ச ஆளா இருக்கணும்.” ஆனா நான் அவள convince பண்ணி ஒத்துக்க வெச்சேன்... “இரண்டு பேரும் கத்துக்கலாம். தெரிஞ்ச அனுபவம் இருக்கற ஆளால நமக்கு கத்துக்க chance கிடைக்கலேனா?” பாதி மனசா ஒத்துக்கிட்டா! வீட்டுக்கு வந்து அப்பா அம்மாகிட்ட சொல்லி முடிக்கல, எங்கப்பா உடனே, “Guest house எல்லாம் ஒண்ணும் வேண்டாம். நம்ம வேதி அத்த பாம்பேல தானே இருக்கா! நீ அவங்க கூடதங்கிக்கோ!!”
வேதி அத்தையை அது வரைக்கும் இரண்டு தடவ தான் பார்த்திருப்பேன். எனக்கு ரொம்ப சங்கடமா ஆயிடுச்சு. பேசாம வீட்ல ஒத்துக்கலன்னு டூப் விட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாமான்னு தோணிச்சு. ஆனா, இந்த பாம்பே ப்ராஜக்ட் கிடைச்சது அதிர்ஷ்டம்! நெறைய கத்துக்க முடியும். So, ஒரே குழப்பம்! நித்யா வேற என்ன நம்பி வரா! Or so I imagined 😊 அப்பா கிட்ட சொல்லி பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். ஊஹூம்! என் தரப்பு வாதங்கள் எல்லாமே செவிடன் காதுல ஊதின சங்கு! “நித்யா வேற வராப்பா. நான்தான் அவள கட்டாயப்படுத்தி ஒத்துக்க வெச்சேன். அவள தனியா எப்படிப்பா விடறது?”. “அதனாலென்ன? அவளும் அத்த வீட்டிலேயே உங்கூட தங்கட்டும்!” பிள்ளையார் பிடிக்க...
உடனே நித்யாவோட அப்பா கிட்ட பேசி எங்கப்பாவே சம்மதம் வாங்கிட்டார்!
அத்தைக்கு ஒரு STD call. “வேதிக்கா! சௌக்கியமா? காயத்ரியும் அவ friendஉம் பாம்பேல 3 மாசம் வேல விஷயமா வரா...” ஒரு 10 நிமிஷத்தில everything got finalised! எங்கப்பா எனக்கு மட்டும் இல்ல. என் friendக்கும் சேர்த்து plan பண்ணிமுடிச்சிட்டார்!!!
மறு நாள் ரொம்ப யோசிச்சு, நானும் நித்யாவும் ஒரு counter plan பண்ணிணோம்!
(தொடரும்)
No comments:
Post a Comment