பாம்பே டைம்ஸ் - பாகம் 6
இந்த இடத்துலேர்ந்து, கட்டாயமா நான் ஹிந்தி கலந்தேயாகணும். ஏன்னாஇப்போ பாம்பேல இருக்கோம்! திராவிடர்கள் மன்னிக்கவும்!
நான் பள்ளிக்கூடத்தில தமிழ் இரண்டாவது மொழியாக படிச்சிருந்தாலும், தனியாHindi Prachar Sabhaல போய் ஹிந்தில 3 பரீட்சை தேர்ச்சிப்பெற்றிருந்தேன். பிலானில மற்றும் டெல்லில கொஞ்சம் கொஞ்சம் பேசறதுக்கும்கத்துக்கிட்டிருந்தேன். So, கொஞ்சம் சுமாரா நல்லாவே பாம்பேலசமாளிச்சுட்டேன். பாம்பே ப்ராமண தமிழர்களோட தமிழக் கேட்டுஇருக்கீங்களா? அதுக்கு ஒரு தனி அகராதியே போடணும்.
என் தம்பி wife பாம்பே தான். அவங்க வீட்ல, மொதல் மொதல்ல பொண்ணுபார்க்க போனப்போ, டிபன் சாப்பிட்டப்பறம், காப்பி குடுத்தாங்க. அவங்க அம்மா, எங்கிட்ட, “காயத்ரி, அடி மே ஷக்கர். ஆத்திக்கே பீயோ” அப்டினாங்க. கொஞ்சம்decode பண்ணினப்பறம் தான் புரிஞ்சுது. அதாவது, “தம்ளர்ல காப்பிக்கு சக்கரதனியா போட்டு இருக்கோம். அது அடில இருக்கும். காப்பிய டபாரால ஆத்திகுடி”. ஸ்ஸ்ஸ்ஸபா....
கதைக்கு வருவோம்!
குஸ்ஸா - அப்படின்னா கோபம். வேதி அத்த அத்திம்பேர்க்கு, நானும் நித்யாவும்வெச்ச பேரு தான் குஸ்ஸா. பெயர் காரணம் என்னவென்றால், அத்த எப்போபார்த்தாலும், “அத்திம்பேர்க்கு இதுக்கு குஸ்ஸா வந்துடும், அதுக்கு குஸ்ஸாவந்துடும். அவர்க்கு நெறய குஸ்ஸா வந்தா கத்துவார். எல்லாத்தையும் தூக்கிபோட்டு உடைப்பார். குஸ்ஸா ஜாஸ்தி. குஸ்ஸா வந்தா நாங்க எல்லாம்தொலஞ்சோம்” னு எங்க ரெண்டு பேர் கிட்டேயும் எப்பவும் குஸ்ஸாவின் கதைகளசொல்லி வளர்த்தா (!). Quite literally, அத்த எங்கள 3 மாசம் வளர்த்தா. நாங்கபோய் 1 மாசம் வரைக்கும், குஸ்ஸா அவரோட மொதல் பெயன் வாசு (அண்ணா) கூட, பரோடாவில இருந்தார். ஒரு மாசம் கழிச்சு, பாம்பே வந்தார்.
அத்த சொல்லுவா, “அத்திம்பேர் வந்தாச்சுன்னா, நீங்க எல்லாம் இப்பிடிகொட்டம் அடிக்க முடியாது. அவருக்கு குஸ்ஸா வந்துடும். கார்த்தால சீக்கரமாஎழுந்துக்கணும் ராத்திரி சீக்கரமா தூங்கணும். இல்லன்னா அவருக்கு............” வாசகர்கள் கோடிட்ட இடத்தை நிரப்பவும்!
எனக்கும், நித்யாவுக்கும் செம tension. இப்போ திரும்பி guest house போறோம்னுசொல்லலாம், ஆனா, சே சே அது அவ்வளவு நல்லா இருக்காது (எங்களுக்கு! இப்போ நாங்க ருசி கண்ட சோம்பேறி பூனைகளாயிருந்தோம்). எப்பவும் போல, பார்த்துக்கலாம்னு தெனாவட்டா இருந்தோம்.
குஸ்ஸா வந்தப்பறம் ஒரு இரண்டு மூணு நாள், நாங்க நிஜமாவே பூன மாதிரி தான்ஆயிட்டோம். என்ன... மியாவ் மட்டும் தான் கத்தல. அதுவும், குஸ்ஸா ஆறடிஉயரம். ஆஜானுபாஹூ. தீர்க்கமான பார்வை. கம்பீரமான, ஆழமான குரல். வெள்ள வெளேர்னு பெரிய தாடி. நாங்க total கப்சிப்!
இந்த மௌனமான நேரங்கள எப்படி ஒடச்சோம்? யாரு help பண்ணிணா? அதுவும் சுவாரஸயமா....
(தொடரும்)
No comments:
Post a Comment