பாம்பே டைம்ஸ் - பாகம் 2
மறுநாள், நெறய வருத்தப்பட்டு, கொஞ்சம் சண்ட போட்டு, நடுவுல நடுவுலஅட்டகாசமா சிரிச்சு, ஒரு 30 நிமிஷம் எங்க boss கிட்ட திட்டு வாங்கி, ஒரு வழியா, plan போட்டோம்.
வீட்ல எல்லாத்துக்கும் தலய ஆட்டிட்டு, பாம்பேல இறங்கினதுக்கு அப்பறம், office colleague “கண்டி”அ (Ganti) stationனுக்கு வர சொல்லிட்டு, office ல எங்களகட்டாயப்படுத்தி guest houseக்கு கூட்டிட்டு போயிட்டாங்கன்னு சொல்லிக்கலாம். அப்பா, வேதி அத்த பையன் கண்ணன் தான் எங்கள கூட்டிட்டு போக ஏற்பாடுசெஞ்சு இருந்தார். நான் அந்த கண்ணன்ன பார்த்தது கூட கிடையாது! So, நாங்கஇறங்கின உடனே, எங்க colleague ஓட ஓடிப்போறதுக்கு திட்டம் போட்டோம் 😂இதுக்கெல்லாம் உபகாரமா, எங்க office ல train ticket அ சரியாக்கூட பார்க்காமRAC ல போட்டுடாங்க. கண்ணன் அவர்களுக்கு எங்க compartment விவரம் கூடசரியா குடுக்க முடியல! சே! (ஹையா!)
பிரயாண நாள் நெருங்க நெருங்க, ஒரு்பக்கம் உற்சாகம், ஒரு பக்கம்வேலயப்பத்தி கவல, ஒரு பக்கம் எல்லாம் எங்க plan படி நடக்கணுமேன்னு ஒருபடபடப்பு!
Train ஏறின அப்புறம் தான் தெரிஞ்சுது, ticket was waitlisted! என்னபண்ணலாம்னு யோசிச்சோம். எப்படியும் முன் வச்ச கால பின்வெக்கக்கூடாதுன்னு, தைரியமா வண்டி ஏறிட்டோம்!
முதல்முதலா வேலைக்காக ஊரு விட்டு ஊரு... செம excitement! நடுவுல வேதிஅத்த, கண்ணன் பத்தி நெனவு வந்தாலும், இப்போ தான் கட்டள போட அப்பாஇல்லியே... யார வேணா சமாளிச்சுக்கலாம்னு ஒரு அதிகப்ரசங்கித்தனமானஅசட்டு தைரியம்! கூடவே “கண்டி” மேல அபார நம்பிக்க!
24 மணி நேர ரயில் பிராயணத்துக்கப்பறம், ஒரு வழியா, பாம்பேல இறங்கறோம்... இங்க தான் விதி எங்க plan ஓட பயங்கர (ரகளையா) விளையாட ஆரம்பிச்சுச்சு!
(தொடரும்)
No comments:
Post a Comment