Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 9

 பாம்பே டைம்ஸ் - பாகம் 9


என்னடா இது! பாம்பே போல ஒரு நவநாகரிகமான நகரத்துல பொறந்துவளர்ந்து, துபாய் போல பல நாடுகளப்பார்த்த கண்ணா அண்ணா என்னிக்கும்இல்லாத மாதிரி, பாவாடச்சட்ட போட்டதுக்கு இப்பிடி கத்தறார்னு, நானும் தான்கொஞ்சம் குழம்பினேன். அப்பறமா மன்னிதான் அண்ணா கிட்ட தனியா போய்கேட்டுட்டு வந்து, சிரிச்சிண்டே சொன்னா, “நம்ம இப்போ போற இடத்தில (fair) giant wheel இருக்கும். நீ அதுல இந்த மாதிரி dress எல்லாம் போட்டுண்டு போனாநன்னா இருக்காது. பொறுக்கி பசங்க எல்லாம் வருவா! ஏதானும் ஏடாகூடமாஅவா comment பண்ணுவாளோன்னு தான் அண்ணா பயப்படறார். உன் கிட்டசொல்ல தயங்கறார்” னு. மன்னி சொல்லி முடிக்கல எனக்கு, என்னையும் அறியாமஅண்ணா மேல இருந்த அன்பும், பாசமும் பல மடங்கா உயர்ந்தது. அண்ணாக்களால மட்டும் தான் தங்கைகளுக்காக இவ்வளவு கவலப்பட முடியும்! அந்த நிமிக்ஷம் நான் நெனச்சது, “ இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும்கண்ணா அண்ணா தான் எனக்கு அண்ணாவா பிறக்கணும்! What a beautiful soul!!


ரொம்ப ஆர்வமா படிக்கிற நேயர்களுக்கு - அன்னிக்கு நான் அந்த dress ல தான்fairக்கு போனேன். ஆனா, அண்ணா கவலப்படக்கூடிய எந்த விஷயமும் செய்யல. எவ்வளவு சவால் விடற நான், எப்படி இவர் அன்புக்கு கட்டுப்பட்டேன்!


அப்போ எனக்கும், ஜெயனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது. ஜெயன்Malaysia வுல இருந்தார். அப்போ தினமும் phone boothக்கு நான் போய் அவரக்கூப்பிட்டு பேசுவேன். இல்ல அவர் வீட்டு நம்பருக்கு phone பண்ணுவார். அண்ணாஎன்ன நல்லா கிண்டல் செய்வார். ஒரு நாள், ஏதேச்சியா என்ன கேட்டார், “உனக்கு சமைக்கத் தெரியுமா?” ன்னு. நான், “இல்லண்ணா! எனக்கு சமையல்லinterestஏ இல்ல” அப்பிடின்னேன். அன்னிலேர்ந்து தினமும், “ஜெயஶ்ரீ! இஸ்கோகுச் சிக்காயோ யார்” மன்னிக்கு உபதேசம். கூடவே என் கிட்ட, “நீ ஒண்ணும்சமைக்கல்லேன்னா உன் ஜெயட்டா என்ன சாப்பிடுவார்?” அப்போவே அண்ணாகவலப்பட ஆரம்பிச்சுட்டார் அவரோட வருங்கால மாப்பிள்ளைக்காக!


வாரக்கடைசில மன்னியோட Dadarல நெறய shopping!


நடுவில ஒரு 4 நாள் எங்க ரெண்டு பேரையும் நாஸிக், ஷீர்டி வேற கூட்டிக்கிட்டுroad trip போனாங்க. அங்க ஒரு ரெண்டு நாள் நிம்மி ்அக்கா வீட்ல டேரா!!


எனக்கும் நித்யாவுக்கும் மாத்தி மாத்தி பூனா போயாகணும்னு ஆனப்போ, நாங்கபோயிட்டு ஆர்த்தர் 12 மணிக்கும் 1 மணிக்கும் வரும்போது, வேதி அத்த, எங்களுக்காக தயிர் சாதம் கலந்து வெச்சிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்க! இந்தகாலத்துல யாராவது செய்வாங்களா? அதுவும் மருமாளுக்கும், அவகூட்டாளிக்கும்? என்ன நாங்க கொடுப்போம் அவங்க அன்புக்கு இணையாக?


இது மாதிரி 3 மாசம் போனதே தெரியல! ஏன்டா திரும்பி Madras போறோம்னுஇருந்தது. But all good things must come to an end! அது மாதிரி, எங்க பாம்பேவாசமும் ஜனவரி மாசம், பொங்கலுக்கு முன்னாடி ஒரு முடிவுக்கு வந்தது! பிரியவேமனசில்லாம அத்தைக்கும், அண்ணாவுக்கும், மன்னிக்கும் “bye bye” சொல்லிட்டு, பாம்பேயோட பசுமையான நினைவுகளை சுமந்துண்டு, Madrasக்குதிரும்பினோம்!


(முற்றும்)


பி. கு. 1: வேலைக்கு போனீங்களே அதுல ஏதாவது கத்துக்கிட்டீங்களான்னு சிலர்கேக்கறது என் காதுல விழறது! Of course!!


பி. கு. 2: அத்த குடும்பத்த தவிர, அவங்க வீட்டுக்கு வெளியே, நானும் நித்யாவும்அடிச்ச லூட்டிப்பத்தி எழுதினா இன்னும் நாலு பாகமாவது தேவப்படும். வாசகர்கள் நலம் கருதி அதெல்லாம் எழுதல. 


பி. கு. 3: என் கதைல வந்த எல்லா கதாப்பாத்திரங்களும் இப்போ எங்கன்னுசொல்ல ஆவல். அதுக்கு இன்னும் ஒரு கொசுறு பாகம் அப்பறமா எழுதறேன்!


நன்றி!!!

பாம்பே டைம்ஸ் - பாகம் 8

 பாம்பே டைம்ஸ் - பாகம் 8


வேதி அத்தைக்கு 2 மகன்கள், 3 மகள்கள். அதுல, கண்ணா அண்ணாக்குஅப்பறமா, அவங்க குடும்பத்துல கடைக்குட்டி தான், எங்க நிம்மி அக்கா. கல்யாணம் ஆகி, அவங்க நாஸிக் ல இருந்தாங்க. அவங்களுக்கு இரண்டுஅழகான குட்டீஸ் - ப்ரணய் (5 வயசு) & சித்தார்த் (6 மாசம்). 


எங்களுக்கு வந்த அந்த நல்ல செய்தி - நிம்மி அக்கா Worli க்கு வராங்க. அவங்கஅம்மாவோட 2 வாரம் தங்க! உடனே, குஸ்ஸா கிட்ட அண்ணா, அவர அவரோடமொதல் பையன் வீட்டுக்கு போகச் சொன்னார். இவ்ளோ வருஷம் கழிச்சு, இப்போ தான் எனக்கு புரியுது. நாங்க ரெண்டு பேரும் இருக்கறதுனால, அவங்கஎல்லாரையும் அந்த குட்டி வீட்ல வச்சுக்கறது, எங்களுக்கு அசௌகரியமாஇருக்குமேன்னு இந்த ஏற்பாடு. அவங்க குடும்பத்துல எல்லாருக்குமே எவ்வளவுபெரிய மனசு!!! ஆனா அப்போதைக்கு, எனக்கும் நித்யாவுக்கும் குஸ்ஸாகிட்டேயிருந்து விடுதலைன்னு சிறு பிள்ளத்தனமா தோணிச்சு. 


நிம்மி அக்கா - very sweet. அவங்க பசங்க - அத விட! எங்க ரெண்டு பேரையும்பாத்தா அவங்களோட “ஆயா” ரேஞ்சுக்கு தான் இருப்போம். தலயும், வேஷமும், குளிக்காம கொள்ளாம, செம தர locals (அதான் இப்போ குஸ்ஸா இல்லியே!). அந்த ரெண்டு குழந்தைகளும் அவ்வளவு அழகாவும், ஐஷ்வர்யமாவும் இருப்பாங்க. 


ப்ரணய் தான் கண்ணா அண்ணாவோட favourite! அவனோட மழலைல “மாமா” ன்னு அவன் கூப்பிடும்போது, அண்ணா அப்பிடியே உருகிடுவார். மன்னி கிட்டதான் அவன் சாப்பிடுவான். அவனுக்கு பிடிச்ச சாப்பாடு தான் சமையல். எவ்வளவுஅன்பு! இங்க தான் “மாமி” ன்னா எப்பிடி இருக்கணும்னு, எங்க மன்னி கிட்டகத்துக்கிட்டேன். Hope I got closer to her level of being a மாமி!


அவன் சாப்பிடறதுக்கு பிடிவாதம் பிடிச்சா, அண்ணா அவரோட நடிப்புதிறமையெல்லாம் திரட்டி, ஒரு கம்பளிய போர்த்திக்கிட்டு, வாசக்கதவு கிட்டபோய் நின்னுகிட்டு, கொரல மாத்திண்டு, “பூச்சாண்டிடிடிடி....”னு பயங்காட்றமாதிரி சொல்லுவார். ப்ரணய் ஒரு 30 விநாடி கண்ண உருட்டிப்பார்த்துட்டு, “கண்ணா மாமா! இதர் ஆவோ!” ன்னு சரியா கண்டுப்பிடிச்சு கூப்பிடுவான். அண்ணா அசடு வழிஞ்சிண்டே, “ ஹே! கைஸே பதா சலா? மஸ்த் ஹை யேலட்கா” அப்பிடின்னு தோல்விய ஒத்துண்டு உள்ள வந்திடுவார். நான்அண்ணாகிட்ட கேட்டேன்,  “குரல மாத்தி பேச எதுக்காக கம்பிளி எல்லாம்போர்த்திண்டு போனீங்க?” அதுக்கு அண்ணா, “அந்த character குள்ளபோறதுக்கு தான் அந்த get up” ன்னு சொல்லி அவரோட ஸ்டைல்லசொல்லுவார். 


இப்பிடி ஒரு 2 வாரம் போனதே தெரியல. நிம்மி அக்காவும் கிளம்பி போயிட்டா. அந்த குழந்தைகளோட அவ்ளோ ஒட்டிக்கிட்டோம். பிரிவு தர கஷ்டம் கொஞ்சநாள். Then life got back to normal. 


எங்க mood அ மாத்தறதுக்கு, அண்ணாவும், மன்னியும் எங்கள fair க்கு கூட்டிட்டுபோக plan பண்ணிணாங்க. நான் என்னோட favourite லேஹங்கா - சோளி(பாவாடை சட்டை) போட்டுக்கிட்டு ஜம்னு கெளம்பினேன். அண்ணா உடனே, “இதான் உன் dress ஆ” ன்னு கேட்டார். நான் நெச்சேன் , “ஓ! நான் இந்த dress ல அழகா இருக்கேன் போல”ன்னு ஆமான்னு அண்ணா கிட்ட தலயாட்டினேன். உடனே அண்ணா, உச்ச ஸ்தாயில, “ஜெயஶ்ரீ.....இவள வேற dress போட்டுண்டுவரச்சொல்லு...என்னது இது” ன்னு?” ஒரே கத்தல். எனக்கு ஒண்ணுமே புரியல. மன்னிக்கும் ஒண்ணும் புரியல. மன்னி, “நன்னாதானே இருக்கு” ன்னு எவ்ளோசொல்லியும் அண்ணா ஒத்துக்கல. ஏன்?


(தொடரும்)

பாம்பே டைம்ஸ் - பாகம் 7

 பாம்பே டைம்ஸ் - பாகம் 7


இங்க தான் ஒரு பெரிய விஷயத்த நான் கத்துக்கிட்டேன். சில பேர சமாளிக்கஅடங்கி போகணும். பல பேர சமாளிக்க நம்ம கொஞ்சம் அதிரடியா இருக்கணும். சொல்லிக்கொடுத்தவர் கண்ணா அண்ணா. குஸ்ஸா கிட்ட அவர் எப்பிடி எல்லாம்சமாளிக்கிறார்னு கூர்ந்து கவனிச்சேன். 


உதாரணத்துக்கு 2 நிகழ்வுகள் பத்தி சொல்றேன்:


ஒரு பெரிய விஷயம் இங்க வாசகர்களுக்கு சொல்லியாகணும். நம்மள்ல எவ்ளோபேர் வீட்ல பண விவரங்கள பசங்க முன்னாடியோ இல்ல கூட பிறந்த அக்கா, தம்பி, அண்ணா, தங்க முன்னாடியோ வெளிப்படையா பேசுவோம்? எவ்ளோ பேர்வரவு செலவு கணக்க தைரியமா வெளிப்படையா discuss பண்ணுவோம்? பணத்தவீட்ல எங்க வெச்சு இருக்கோம்னு விருந்தாளிகள் முன்னாடி சொல்லுவோம்? 


இந்த மாதிரி, 2 ரெண்டுங்கெட்டான் girls as guests at home for 3 months! அத்தகுடும்பத்தில எவ்வளவோ ரகசியமா பேசி, எங்கள ரொம்ப நெளிய வெச்சு, கூசவெச்சுருக்கலாம்? ஒரேயொரு தடவ கூட எங்களுக்கு தர்ம சங்கடம் வராம அந்தமொத்த குடும்பமும் அவ்வளவு அழகா விருந்தோம்பல் செய்தாங்க. மறக்கமுடியல!


கண்ணா அண்ணா usual dialogues, “ஜெயஶ்ரீ....சலோ சலோ....கஹான்ஹை....எங்க வெச்சுட்ட நீ....பைசா??”  மன்னி, அடுப்படிலேர்ந்தே, “டீக் தரஹ்ஸே தேகோ! அந்த பீரோல ரெண்டாவது shelfல வெச்சேன்!” அண்ணா, “அம்மா! நீ பாத்தியா?” அத்த, “என்ன எதுக்காக்கும் கேக்கறாய்? எனக்கு தெரியாது!” அண்ணா, “ ஹே, ஜெயஶ்ரீ! கஹான் ரக்கா? ரே! கிதர் ஹை!!” மன்னி, அவசரஅவசரமா, கைய்தொடச்சிண்டே வந்து, அலமாரிலேர்ந்து சரியா தான் சொன்னஎடத்திலேர்ந்து, அந்த பணக்கவர எடுத்துக்கொடுத்துட்டு, “ உங்குளுக்கு கண்ணுதெரியலயா” ன்னு சிரிச்சிண்டே மறுபடியும் kitchenனுக்கு போயிடுவா! அண்ணா, செத்த அசடு வழிஞ்சிண்டே, “நீ எதுக்கு அங்க வெச்ச?” னு கேட்டுண்டே, எங்கமுன்னாடியே பணத்த எண்ண்ஆரம்பிச்சுடுவார்!


குஸ்ஸாவுக்கு ஒரு ஒரு பைசாவுக்கும் அண்ணா கணக்கு சொல்லுவார். இல்லஇல்ல. கணக்கு சொல்றா மாதிரி பாவ்லா காட்டுவார். “என்னடா! 100 ரூபாகொறயறதே”. “இல்லயே! நா இப்போ தானே எண்ணிணேன். ஷரியாபாருங்கோ!” குஸ்ஸா மறுபடி எண்ணி முடிக்கறதுக்குள்ள, பாண்ட் ஷர்ட்பாக்கெட்டெல்லாம் தேடற மாதிரி பாவன பண்ணிட்டு, மன்னி கிட்ட கண்ணகாட்டுவார். மன்னியும் குஸ்ஸா கவனிக்கறதுக்குள்ள எங்கேர்ந்தோ ஒரு 100 ரூபாநோட்ட அண்ணா கிட்ட கைல அழுத்திடுவா. அண்ணா, ரொம்ப இயற்கையா அதபாக்கெட்லேர்ந்து தொழாவி எடுத்த மாதிரி, குஸ்ஸா கிட்ட குடுத்து, “இப்போஷரியா இருக்கா?” ன்னு கேப்பார். குஸ்ஸாவும், “உம் உம்” அப்பிடிம்பார். So, மொதல் பாடம், “எப்படியாவது சமாளி!” இத்தனைக்கும் அண்ணா அந்தபணத்துல யாருக்காவது helpதான் பண்ணியிருப்பார். ஆனா, குஸ்ஸா எல்லாமேஅவர கேட்டுட்டு தான் பண்ணணும்னு எதிர் பார்க்கற டைப்!


இன்னொரு தடவ, அண்ணா கொஞ்சம் குரல உசத்தி தன் பக்கம் இருந்தநியாயத்த எடுத்துச்சொன்னார். குஸ்ஸா முணுமுணுத்திண்டேஅடங்கிப்போயிட்டார்! இரண்டாவது பாடம், “தேவப்பட்டா, தடாலடியா குரலஉசத்து!”


நானோ நித்யாவோ இப்பிடியெல்லாம் குஸ்ஸாவ சமாளிக்க முடியுமா, என்ன? நாங்க அண்ணா கிட்ட தான் பேசுவோம். He was very understanding. மன்னியும்எங்களுக்கு பெரிய ஆறுதல். எப்பிடியோ ஒரு இரண்டு வாரம் போச்சு! அப்போதான் எங்களுக்கு ஒரு ரொம்ப நல்ல சேதி வந்தது!


(தொடரும்)