Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 5

 பாம்பே டைம்ஸ் - பாகம் 5


எனக்கும் நித்யாவுக்கும் ஒரு 6 மாசமாதான் பழக்கம் ஆனாகண்டதும் காதல்மாதிரிஎனக்கு அவள பார்த்த உடனே பிடிச்சுடுத்து. I am still not sure if the other way is the same 😊எங்க இரண்டு பேருக்கும் இந்த 6 மாச ஸ்னேகத்திலநெறய ஒத்துமைகள் இருக்குன்னும்அதவிட ஜாஸ்தி வேத்துமைகள் இருப்பதும்தெரிஞ்சுதுஆனா, we both accepted each other the way we are அப்படிங்கறதுதான்இன்னி வரைக்கும் எங்க நட்பு நெலச்சு நிக்க மிக பெரிய காரணம்எங்கமுக்கியமான ஒத்தும, our love for filter coffee. சாதாரணமா காப்பின்னு எழுதிவச்சாலேஅதப்பார்த்து பரவசம் அடையற டைப் இரண்டு பேரும்


மன்னி எங்கக்கிட்ட, “காப்பி குடிப்பீங்களா?” ன்னு கேட்ட உடனே, “இங்கசந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே...” dialogue தான் ஞாபகம் வந்ததுஇரண்டு பேரும் அசடு வழிஞ்சிண்டு தலயாட்டினோம்ஒரு 5 நிமிஷத்துலஆவிபறக்கநொற பொங்கஒண்ணாங்களாஸ் பில்டர் காப்பிடபரா தம்ளர்ல!!! கண்ல ஆனந்த்கண்ணீரோட மன்னி அப்படியே ஒரு மதர் தெராசாவாஒருமங்கையர் குல மாணிக்கமாஒரு தேவதையா தெரிஞ்சா!!! கண்ணதொடச்சிண்டு அந்த காப்பிய காதலோட 10 நிமிஷம் ஒண்ணும் பேசாமஅனுபவிச்சுருசிச்சு குடிச்சோம்காப்பிய முடச்சப்போவாழ்க்கைலமிகப்பெரியத்தீர்மானமும் எடுத்தேன்நித்யாவப் பார்த்தேன்எங்கள் கண்கள்பேசின. “Guest house  இப்பிடி ஒரு காப்பி கெடச்சு இருக்குமா?”  அதுக்குஅவ, “சான்ஸ்ஸே இல்ல!”  What else matters! வேற ஒண்ணுமே வேண்டாம்மன்னிஉங்களுக்கு இந்த நிமிஷத்துலேர்ந்து நாங்க அடிமை!


கொஞ்சமா தைரியத்த வரவழச்சிண்டுஅண்ணா கிட்ட கேட்க நெனச்சதமெதுவா கேட்டேன். “அண்ணாநீங்க என்ன பார்த்ததே இல்லியேஎப்பிடிஎங்கள ஸ்டேஷன்லஅந்த ஜன சமுத்திரத்துல அடையாளம் கண்டு பிடிச்சீங்க?” அண்ணா அவரோட ஸ்டைல்ல, “நீங்க ரெண்டு பேரும் தான் திருதிருன்னுமுழிச்சிண்டு இருந்தீங்களேயார் வேணாச்சொல்லிடுவாஅத்த வேற பழையஆல்பத்திலேர்ந்து நீ மகாலிபுரத்துல எடுத்திண்ட photo காமிச்சாஅதுக்கெல்லாம் அவசியமே இருக்கல!” அத்தையும்மன்னியும் இதக்கேட்டுபயங்கரமா சிரிச்சாமானம் gone once more!


வீடு 500 சதுர அடிஒரு குளியலறைஓரேயோரு படுக்கையறைசமயக்கட்டுஒருமிகச்சின்ன வராண்டாஅவ்ளோதான்அந்த 3 மாசம் அத்தஅண்ணா & மன்னிஎங்களுக்கு ஒரு மிக பிரம்மாண்டமான மாளிகை வாழ்க்கையைக் கொடுத்தாஇன்னி வரைக்கும் மறக்க முடியாத ஒரு 3 மாசம் அது


அண்ணா கோபக்ககாரரோன்னு நான் பயந்ததெல்லாம் அப்பறம் தான்தெரிஞ்சுதுஅவருக்கு நடிக்கறதுக்கு ரொம்ப பிடிக்கும்னுஎனக்கு சின்னவயசுலேர்ந்தே அண்ணான்னு ஒரு உன்னதமான உறவு இல்லையேன்னு ரொம்பவருத்தப்பட்டுருக்கேன்கண்ணா அண்ணாவோட உண்மையான அன்புல தான்எனக்கு புரிஞ்சுது, “கூடப்பிறந்தா தான் அண்ணாவா?” 


தினமும் காலைல எழுந்துக்கறத்துலேர்ந்து ராத்திரி தூங்கப்போகற வரைக்கும், office லேயும் சரவீட்லேயும் சரி எவ்வளவு கத்துகிட்டேன்அந்த அளவு மகிழ்ச்சிபின் நாட்களில் நீடிக்க ஒரு அம்மாவா எப்பிடி இருக்கணும்ஒரு அத்தையாஒருமனைவியாஒரு மருமகளா... இந்த எல்லா பாடத்தையும் அத்தையும்மன்னியும்அவங்க நடந்துக்கிட்ட விதத்துல நான் கத்துக்கிட்டேன்மன்னியோட டோக்ளாபுலவ்தோசை-சட்னிசாம்பார்-இட்லிபூரி-சென்னா... இப்பிடி அடுக்கிண்டேபோகலாம். 8 மணிக்கு தான் கார்த்தால கஷ்ப்பட்டு எழுந்திருப்போம்பல்லுக்கூடதேய்க்காம மொதல்ல ATN ன்னு ஒரு சானல்ல வரிசையா ஹிந்தி பாட்டாபோடுவான்நித்யாவுக்கு ஹிந்தின்னா உயிர்ஆனா பேச வராதுஷாருக்கான்னாஅவ காப்பியக்கூட தியாகம் பண்ணிடுவாநான் ஹிந்தி சுமாரா பேசுவேன்எங்கவீட்ல ஹிந்தி பாட்டெல்லாம் அவ்வளவா கேட்க மாட்டோம் ஆனா நான் பிலானிநாட்கள்ள நெறய கேட்டு இருக்கேன்நான் ஸல்மான் fan!


விடியும்போதே எங்க இந்த கட்சி பூசல்ல தான் விடியும்அண்ணாவுக்குஎங்களோட இந்த சண்டையைல்லாம் ரொம்ப பிடிக்கும்ஆனாஅவர் கார்த்தாலமணிலேர்ந்து 1 அவர் (அதாவது நாங்க எழுந்துக்கற வரைக்கும்) newspaper படிச்சிண்டு இருப்பார்மன்னியும்அத்தையும் kitchen பிஸியா இருப்பாநாங்கதிருப்பள்ளியழுச்சி ஆன அப்பறம் தான் அண்ணா ஹாலுக்கே வருவார்நாங்கரெண்டு பேரும் மெதுவா பல்லு தேச்சு ஆவி பறக்கறக்காப்பி ஹிந்திபாடல்களோடு ரசிச்சு குடுச்சு, breakfast எல்லாம் திவ்யமா சாப்டுட்டுஅவசரமேஇல்லாம ஆர அமர office க்கு ஒரு 10 மணிக்கு கெளம்புவோம்


சாயந்திரம் 7 மணிக்கு திரும்பி வந்தா தினமும் ஒரு திரைப்படம்செம கலாட்டாசிரிப்புஅரட்டக்கச்சேரிநல்ல சாப்பாடு


இந்த அட்டகாசத்தயெல்லாம் அடக்க வந்தார் ஒருத்தர்அவருக்கு நாங்க வெச்சபேரு... குஸ்ஸா... அப்பிடின்னா???


(தொடரும்)

No comments: