Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 7

 பாம்பே டைம்ஸ் - பாகம் 7


இங்க தான் ஒரு பெரிய விஷயத்த நான் கத்துக்கிட்டேன்சில பேர சமாளிக்கஅடங்கி போகணும்பல பேர சமாளிக்க நம்ம கொஞ்சம் அதிரடியா இருக்கணும்சொல்லிக்கொடுத்தவர் கண்ணா அண்ணாகுஸ்ஸா கிட்ட அவர் எப்பிடி எல்லாம்சமாளிக்கிறார்னு கூர்ந்து கவனிச்சேன்


உதாரணத்துக்கு 2 நிகழ்வுகள் பத்தி சொல்றேன்:


ஒரு பெரிய விஷயம் இங்க வாசகர்களுக்கு சொல்லியாகணும்நம்மள்ல எவ்ளோபேர் வீட்ல பண விவரங்கள பசங்க முன்னாடியோ இல்ல கூட பிறந்த அக்காதம்பிஅண்ணாதங்க முன்னாடியோ வெளிப்படையா பேசுவோம்எவ்ளோ பேர்வரவு செலவு கணக்க தைரியமா வெளிப்படையா discuss பண்ணுவோம்பணத்தவீட்ல எங்க வெச்சு இருக்கோம்னு விருந்தாளிகள் முன்னாடி சொல்லுவோம்


இந்த மாதிரி, 2 ரெண்டுங்கெட்டான் girls as guests at home for 3 months! அத்தகுடும்பத்தில எவ்வளவோ ரகசியமா பேசிஎங்கள ரொம்ப நெளிய வெச்சுகூசவெச்சுருக்கலாம்ஒரேயொரு தடவ கூட எங்களுக்கு தர்ம சங்கடம் வராம அந்தமொத்த குடும்பமும் அவ்வளவு அழகா விருந்தோம்பல் செய்தாங்கமறக்கமுடியல!


கண்ணா அண்ணா usual dialogues, “ஜெயஶ்ரீ....சலோ சலோ....கஹான்ஹை....எங்க வெச்சுட்ட நீ....பைசா??”  மன்னிஅடுப்படிலேர்ந்தே, “டீக் தரஹ்ஸே தேகோஅந்த பீரோல ரெண்டாவது shelf வெச்சேன்!” அண்ணா, “அம்மாநீ பாத்தியா?” அத்த, “என்ன எதுக்காக்கும் கேக்கறாய்எனக்கு தெரியாது!” அண்ணா, “ ஹேஜெயஶ்ரீகஹான் ரக்காரேகிதர் ஹை!!” மன்னிஅவசரஅவசரமாகைய்தொடச்சிண்டே வந்துஅலமாரிலேர்ந்து சரியா தான் சொன்னஎடத்திலேர்ந்துஅந்த பணக்கவர எடுத்துக்கொடுத்துட்டு, “ உங்குளுக்கு கண்ணுதெரியலயா” ன்னு சிரிச்சிண்டே மறுபடியும் kitchenனுக்கு போயிடுவாஅண்ணாசெத்த அசடு வழிஞ்சிண்டே, “நீ எதுக்கு அங்க வெச்ச?” னு கேட்டுண்டேஎங்கமுன்னாடியே பணத்த எண்ண்ஆரம்பிச்சுடுவார்!


குஸ்ஸாவுக்கு ஒரு ஒரு பைசாவுக்கும் அண்ணா கணக்கு சொல்லுவார்இல்லஇல்லகணக்கு சொல்றா மாதிரி பாவ்லா காட்டுவார். “என்னடா! 100 ரூபாகொறயறதே”. “இல்லயேநா இப்போ தானே எண்ணிணேன்ஷரியாபாருங்கோ!” குஸ்ஸா மறுபடி எண்ணி முடிக்கறதுக்குள்ளபாண்ட் ஷர்ட்பாக்கெட்டெல்லாம் தேடற மாதிரி பாவன பண்ணிட்டுமன்னி கிட்ட கண்ணகாட்டுவார்மன்னியும் குஸ்ஸா கவனிக்கறதுக்குள்ள எங்கேர்ந்தோ ஒரு 100 ரூபாநோட்ட அண்ணா கிட்ட கைல அழுத்திடுவாஅண்ணாரொம்ப இயற்கையா அதபாக்கெட்லேர்ந்து தொழாவி எடுத்த மாதிரிகுஸ்ஸா கிட்ட குடுத்து, “இப்போஷரியா இருக்கா?” ன்னு கேப்பார்குஸ்ஸாவும், “உம் உம்” அப்பிடிம்பார். So, மொதல் பாடம், “எப்படியாவது சமாளி!” இத்தனைக்கும் அண்ணா அந்தபணத்துல யாருக்காவது helpதான் பண்ணியிருப்பார்ஆனாகுஸ்ஸா எல்லாமேஅவர கேட்டுட்டு தான் பண்ணணும்னு எதிர் பார்க்கற டைப்!


இன்னொரு தடவஅண்ணா கொஞ்சம் குரல உசத்தி தன் பக்கம் இருந்தநியாயத்த எடுத்துச்சொன்னார்குஸ்ஸா முணுமுணுத்திண்டேஅடங்கிப்போயிட்டார்இரண்டாவது பாடம், “தேவப்பட்டாதடாலடியா குரலஉசத்து!”


நானோ நித்யாவோ இப்பிடியெல்லாம் குஸ்ஸாவ சமாளிக்க முடியுமாஎன்னநாங்க அண்ணா கிட்ட தான் பேசுவோம். He was very understanding. மன்னியும்எங்களுக்கு பெரிய ஆறுதல்எப்பிடியோ ஒரு இரண்டு வாரம் போச்சுஅப்போதான் எங்களுக்கு ஒரு ரொம்ப நல்ல சேதி வந்தது!


(தொடரும்)


No comments: