பாம்பே டைம்ஸ் - பாகம் 8
வேதி அத்தைக்கு 2 மகன்கள், 3 மகள்கள். அதுல, கண்ணா அண்ணாக்குஅப்பறமா, அவங்க குடும்பத்துல கடைக்குட்டி தான், எங்க நிம்மி அக்கா. கல்யாணம் ஆகி, அவங்க நாஸிக் ல இருந்தாங்க. அவங்களுக்கு இரண்டுஅழகான குட்டீஸ் - ப்ரணய் (5 வயசு) & சித்தார்த் (6 மாசம்).
எங்களுக்கு வந்த அந்த நல்ல செய்தி - நிம்மி அக்கா Worli க்கு வராங்க. அவங்கஅம்மாவோட 2 வாரம் தங்க! உடனே, குஸ்ஸா கிட்ட அண்ணா, அவர அவரோடமொதல் பையன் வீட்டுக்கு போகச் சொன்னார். இவ்ளோ வருஷம் கழிச்சு, இப்போ தான் எனக்கு புரியுது. நாங்க ரெண்டு பேரும் இருக்கறதுனால, அவங்கஎல்லாரையும் அந்த குட்டி வீட்ல வச்சுக்கறது, எங்களுக்கு அசௌகரியமாஇருக்குமேன்னு இந்த ஏற்பாடு. அவங்க குடும்பத்துல எல்லாருக்குமே எவ்வளவுபெரிய மனசு!!! ஆனா அப்போதைக்கு, எனக்கும் நித்யாவுக்கும் குஸ்ஸாகிட்டேயிருந்து விடுதலைன்னு சிறு பிள்ளத்தனமா தோணிச்சு.
நிம்மி அக்கா - very sweet. அவங்க பசங்க - அத விட! எங்க ரெண்டு பேரையும்பாத்தா அவங்களோட “ஆயா” ரேஞ்சுக்கு தான் இருப்போம். தலயும், வேஷமும், குளிக்காம கொள்ளாம, செம தர locals (அதான் இப்போ குஸ்ஸா இல்லியே!). அந்த ரெண்டு குழந்தைகளும் அவ்வளவு அழகாவும், ஐஷ்வர்யமாவும் இருப்பாங்க.
ப்ரணய் தான் கண்ணா அண்ணாவோட favourite! அவனோட மழலைல “மாமா” ன்னு அவன் கூப்பிடும்போது, அண்ணா அப்பிடியே உருகிடுவார். மன்னி கிட்டதான் அவன் சாப்பிடுவான். அவனுக்கு பிடிச்ச சாப்பாடு தான் சமையல். எவ்வளவுஅன்பு! இங்க தான் “மாமி” ன்னா எப்பிடி இருக்கணும்னு, எங்க மன்னி கிட்டகத்துக்கிட்டேன். Hope I got closer to her level of being a மாமி!
அவன் சாப்பிடறதுக்கு பிடிவாதம் பிடிச்சா, அண்ணா அவரோட நடிப்புதிறமையெல்லாம் திரட்டி, ஒரு கம்பளிய போர்த்திக்கிட்டு, வாசக்கதவு கிட்டபோய் நின்னுகிட்டு, கொரல மாத்திண்டு, “பூச்சாண்டிடிடிடி....”னு பயங்காட்றமாதிரி சொல்லுவார். ப்ரணய் ஒரு 30 விநாடி கண்ண உருட்டிப்பார்த்துட்டு, “கண்ணா மாமா! இதர் ஆவோ!” ன்னு சரியா கண்டுப்பிடிச்சு கூப்பிடுவான். அண்ணா அசடு வழிஞ்சிண்டே, “ ஹே! கைஸே பதா சலா? மஸ்த் ஹை யேலட்கா” அப்பிடின்னு தோல்விய ஒத்துண்டு உள்ள வந்திடுவார். நான்அண்ணாகிட்ட கேட்டேன், “குரல மாத்தி பேச எதுக்காக கம்பிளி எல்லாம்போர்த்திண்டு போனீங்க?” அதுக்கு அண்ணா, “அந்த character குள்ளபோறதுக்கு தான் அந்த get up” ன்னு சொல்லி அவரோட ஸ்டைல்லசொல்லுவார்.
இப்பிடி ஒரு 2 வாரம் போனதே தெரியல. நிம்மி அக்காவும் கிளம்பி போயிட்டா. அந்த குழந்தைகளோட அவ்ளோ ஒட்டிக்கிட்டோம். பிரிவு தர கஷ்டம் கொஞ்சநாள். Then life got back to normal.
எங்க mood அ மாத்தறதுக்கு, அண்ணாவும், மன்னியும் எங்கள fair க்கு கூட்டிட்டுபோக plan பண்ணிணாங்க. நான் என்னோட favourite லேஹங்கா - சோளி(பாவாடை சட்டை) போட்டுக்கிட்டு ஜம்னு கெளம்பினேன். அண்ணா உடனே, “இதான் உன் dress ஆ” ன்னு கேட்டார். நான் நெச்சேன் , “ஓ! நான் இந்த dress ல அழகா இருக்கேன் போல”ன்னு ஆமான்னு அண்ணா கிட்ட தலயாட்டினேன். உடனே அண்ணா, உச்ச ஸ்தாயில, “ஜெயஶ்ரீ.....இவள வேற dress போட்டுண்டுவரச்சொல்லு...என்னது இது” ன்னு?” ஒரே கத்தல். எனக்கு ஒண்ணுமே புரியல. மன்னிக்கும் ஒண்ணும் புரியல. மன்னி, “நன்னாதானே இருக்கு” ன்னு எவ்ளோசொல்லியும் அண்ணா ஒத்துக்கல. ஏன்?
(தொடரும்)
No comments:
Post a Comment