Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 9

 பாம்பே டைம்ஸ் - பாகம் 9


என்னடா இதுபாம்பே போல ஒரு நவநாகரிகமான நகரத்துல பொறந்துவளர்ந்துதுபாய் போல பல நாடுகளப்பார்த்த கண்ணா அண்ணா என்னிக்கும்இல்லாத மாதிரிபாவாடச்சட்ட போட்டதுக்கு இப்பிடி கத்தறார்னுநானும் தான்கொஞ்சம் குழம்பினேன்அப்பறமா மன்னிதான் அண்ணா கிட்ட தனியா போய்கேட்டுட்டு வந்துசிரிச்சிண்டே சொன்னா, “நம்ம இப்போ போற இடத்தில (fair) giant wheel இருக்கும்நீ அதுல இந்த மாதிரி dress எல்லாம் போட்டுண்டு போனாநன்னா இருக்காதுபொறுக்கி பசங்க எல்லாம் வருவாஏதானும் ஏடாகூடமாஅவா comment பண்ணுவாளோன்னு தான் அண்ணா பயப்படறார்உன் கிட்டசொல்ல தயங்கறார்” னுமன்னி சொல்லி முடிக்கல எனக்குஎன்னையும் அறியாமஅண்ணா மேல இருந்த அன்பும்பாசமும் பல மடங்கா உயர்ந்ததுஅண்ணாக்களால மட்டும் தான் தங்கைகளுக்காக இவ்வளவு கவலப்பட முடியும்அந்த நிமிக்ஷம் நான் நெனச்சது, “ இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும்கண்ணா அண்ணா தான் எனக்கு அண்ணாவா பிறக்கணும்! What a beautiful soul!!


ரொம்ப ஆர்வமா படிக்கிற நேயர்களுக்கு - அன்னிக்கு நான் அந்த dress  தான்fairக்கு போனேன்ஆனாஅண்ணா கவலப்படக்கூடிய எந்த விஷயமும் செய்யலஎவ்வளவு சவால் விடற நான்எப்படி இவர் அன்புக்கு கட்டுப்பட்டேன்!


அப்போ எனக்கும்ஜெயனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்ததுஜெயன்Malaysia வுல இருந்தார்அப்போ தினமும் phone boothக்கு நான் போய் அவரக்கூப்பிட்டு பேசுவேன்இல்ல அவர் வீட்டு நம்பருக்கு phone பண்ணுவார்அண்ணாஎன்ன நல்லா கிண்டல் செய்வார்ஒரு நாள்ஏதேச்சியா என்ன கேட்டார், “உனக்கு சமைக்கத் தெரியுமா?” ன்னுநான், “இல்லண்ணாஎனக்கு சமையல்லinterest இல்ல” அப்பிடின்னேன்அன்னிலேர்ந்து தினமும், “ஜெயஶ்ரீஇஸ்கோகுச் சிக்காயோ யார்” மன்னிக்கு உபதேசம்கூடவே என் கிட்ட, “நீ ஒண்ணும்சமைக்கல்லேன்னா உன் ஜெயட்டா என்ன சாப்பிடுவார்?” அப்போவே அண்ணாகவலப்பட ஆரம்பிச்சுட்டார் அவரோட வருங்கால மாப்பிள்ளைக்காக!


வாரக்கடைசில மன்னியோட Dadar நெறய shopping!


நடுவில ஒரு 4 நாள் எங்க ரெண்டு பேரையும் நாஸிக்ஷீர்டி வேற கூட்டிக்கிட்டுroad trip போனாங்கஅங்க ஒரு ரெண்டு நாள் நிம்மி ்அக்கா வீட்ல டேரா!!


எனக்கும் நித்யாவுக்கும் மாத்தி மாத்தி பூனா போயாகணும்னு ஆனப்போநாங்கபோயிட்டு ஆர்த்தர் 12 மணிக்கும் 1 மணிக்கும் வரும்போதுவேதி அத்தஎங்களுக்காக தயிர் சாதம் கலந்து வெச்சிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்கஇந்தகாலத்துல யாராவது செய்வாங்களாஅதுவும் மருமாளுக்கும்அவகூட்டாளிக்கும்என்ன நாங்க கொடுப்போம் அவங்க அன்புக்கு இணையாக?


இது மாதிரி 3 மாசம் போனதே தெரியலஏன்டா திரும்பி Madras போறோம்னுஇருந்தது. But all good things must come to an end! அது மாதிரிஎங்க பாம்பேவாசமும் ஜனவரி மாசம்பொங்கலுக்கு முன்னாடி ஒரு முடிவுக்கு வந்ததுபிரியவேமனசில்லாம அத்தைக்கும்அண்ணாவுக்கும்மன்னிக்கும் “bye bye” சொல்லிட்டுபாம்பேயோட பசுமையான நினைவுகளை சுமந்துண்டு, Madrasக்குதிரும்பினோம்!


(முற்றும்)


பிகு. 1: வேலைக்கு போனீங்களே அதுல ஏதாவது கத்துக்கிட்டீங்களான்னு சிலர்கேக்கறது என் காதுல விழறது! Of course!!


பிகு. 2: அத்த குடும்பத்த தவிரஅவங்க வீட்டுக்கு வெளியேநானும் நித்யாவும்அடிச்ச லூட்டிப்பத்தி எழுதினா இன்னும் நாலு பாகமாவது தேவப்படும்வாசகர்கள் நலம் கருதி அதெல்லாம் எழுதல


பிகு. 3: என் கதைல வந்த எல்லா கதாப்பாத்திரங்களும் இப்போ எங்கன்னுசொல்ல ஆவல்அதுக்கு இன்னும் ஒரு கொசுறு பாகம் அப்பறமா எழுதறேன்!


நன்றி!!!

பாம்பே டைம்ஸ் - பாகம் 8

 பாம்பே டைம்ஸ் - பாகம் 8


வேதி அத்தைக்கு 2 மகன்கள், 3 மகள்கள்அதுலகண்ணா அண்ணாக்குஅப்பறமாஅவங்க குடும்பத்துல கடைக்குட்டி தான்எங்க நிம்மி அக்காகல்யாணம் ஆகிஅவங்க நாஸிக்  இருந்தாங்கஅவங்களுக்கு இரண்டுஅழகான குட்டீஸ் - ப்ரணய் (5 வயசு) & சித்தார்த் (6 மாசம்). 


எங்களுக்கு வந்த அந்த நல்ல செய்தி - நிம்மி அக்கா Worli க்கு வராங்கஅவங்கஅம்மாவோட 2 வாரம் தங்கஉடனேகுஸ்ஸா கிட்ட அண்ணாஅவர அவரோடமொதல் பையன் வீட்டுக்கு போகச் சொன்னார்இவ்ளோ வருஷம் கழிச்சுஇப்போ தான் எனக்கு புரியுதுநாங்க ரெண்டு பேரும் இருக்கறதுனாலஅவங்கஎல்லாரையும் அந்த குட்டி வீட்ல வச்சுக்கறதுஎங்களுக்கு அசௌகரியமாஇருக்குமேன்னு இந்த ஏற்பாடுஅவங்க குடும்பத்துல எல்லாருக்குமே எவ்வளவுபெரிய மனசு!!! ஆனா அப்போதைக்குஎனக்கும் நித்யாவுக்கும் குஸ்ஸாகிட்டேயிருந்து விடுதலைன்னு சிறு பிள்ளத்தனமா தோணிச்சு


நிம்மி அக்கா - very sweet. அவங்க பசங்க - அத விடஎங்க ரெண்டு பேரையும்பாத்தா அவங்களோட “ஆயா” ரேஞ்சுக்கு தான் இருப்போம்தலயும்வேஷமும்குளிக்காம கொள்ளாமசெம தர locals (அதான் இப்போ குஸ்ஸா இல்லியே!). அந்த ரெண்டு குழந்தைகளும் அவ்வளவு அழகாவும்ஐஷ்வர்யமாவும் இருப்பாங்க


ப்ரணய் தான் கண்ணா அண்ணாவோட favourite! அவனோட மழலைல “மாமா” ன்னு அவன் கூப்பிடும்போதுஅண்ணா அப்பிடியே உருகிடுவார்மன்னி கிட்டதான் அவன் சாப்பிடுவான்அவனுக்கு பிடிச்ச சாப்பாடு தான் சமையல்எவ்வளவுஅன்புஇங்க தான் “மாமி” ன்னா எப்பிடி இருக்கணும்னுஎங்க மன்னி கிட்டகத்துக்கிட்டேன். Hope I got closer to her level of being a மாமி!


அவன் சாப்பிடறதுக்கு பிடிவாதம் பிடிச்சாஅண்ணா அவரோட நடிப்புதிறமையெல்லாம் திரட்டிஒரு கம்பளிய போர்த்திக்கிட்டுவாசக்கதவு கிட்டபோய் நின்னுகிட்டுகொரல மாத்திண்டு, “பூச்சாண்டிடிடிடி....”னு பயங்காட்றமாதிரி சொல்லுவார்ப்ரணய் ஒரு 30 விநாடி கண்ண உருட்டிப்பார்த்துட்டு, “கண்ணா மாமாஇதர் ஆவோ!” ன்னு சரியா கண்டுப்பிடிச்சு கூப்பிடுவான்அண்ணா அசடு வழிஞ்சிண்டே, “ ஹேகைஸே பதா சலாமஸ்த் ஹை யேலட்கா” அப்பிடின்னு தோல்விய ஒத்துண்டு உள்ள வந்திடுவார்நான்அண்ணாகிட்ட கேட்டேன் குரல மாத்தி பேச எதுக்காக கம்பிளி எல்லாம்போர்த்திண்டு போனீங்க?” அதுக்கு அண்ணா, “அந்த character குள்ளபோறதுக்கு தான் அந்த get up” ன்னு சொல்லி அவரோட ஸ்டைல்லசொல்லுவார்


இப்பிடி ஒரு 2 வாரம் போனதே தெரியலநிம்மி அக்காவும் கிளம்பி போயிட்டாஅந்த குழந்தைகளோட அவ்ளோ ஒட்டிக்கிட்டோம்பிரிவு தர கஷ்டம் கொஞ்சநாள். Then life got back to normal. 


எங்க mood  மாத்தறதுக்குஅண்ணாவும்மன்னியும் எங்கள fair க்கு கூட்டிட்டுபோக plan பண்ணிணாங்கநான் என்னோட favourite லேஹங்கா - சோளி(பாவாடை சட்டைபோட்டுக்கிட்டு ஜம்னு கெளம்பினேன்அண்ணா உடனே, “இதான் உன் dress ” ன்னு கேட்டார்நான் நெச்சேன் , “நான் இந்த dress  அழகா இருக்கேன் போலன்னு ஆமான்னு அண்ணா கிட்ட தலயாட்டினேன்உடனே அண்ணாஉச்ச ஸ்தாயில, “ஜெயஶ்ரீ.....இவள வேற dress போட்டுண்டுவரச்சொல்லு...என்னது இது” ன்னு?” ஒரே கத்தல்எனக்கு ஒண்ணுமே புரியலமன்னிக்கும் ஒண்ணும் புரியலமன்னி, “நன்னாதானே இருக்கு” ன்னு எவ்ளோசொல்லியும் அண்ணா ஒத்துக்கலஏன்?


(தொடரும்)

பாம்பே டைம்ஸ் - பாகம் 7

 பாம்பே டைம்ஸ் - பாகம் 7


இங்க தான் ஒரு பெரிய விஷயத்த நான் கத்துக்கிட்டேன்சில பேர சமாளிக்கஅடங்கி போகணும்பல பேர சமாளிக்க நம்ம கொஞ்சம் அதிரடியா இருக்கணும்சொல்லிக்கொடுத்தவர் கண்ணா அண்ணாகுஸ்ஸா கிட்ட அவர் எப்பிடி எல்லாம்சமாளிக்கிறார்னு கூர்ந்து கவனிச்சேன்


உதாரணத்துக்கு 2 நிகழ்வுகள் பத்தி சொல்றேன்:


ஒரு பெரிய விஷயம் இங்க வாசகர்களுக்கு சொல்லியாகணும்நம்மள்ல எவ்ளோபேர் வீட்ல பண விவரங்கள பசங்க முன்னாடியோ இல்ல கூட பிறந்த அக்காதம்பிஅண்ணாதங்க முன்னாடியோ வெளிப்படையா பேசுவோம்எவ்ளோ பேர்வரவு செலவு கணக்க தைரியமா வெளிப்படையா discuss பண்ணுவோம்பணத்தவீட்ல எங்க வெச்சு இருக்கோம்னு விருந்தாளிகள் முன்னாடி சொல்லுவோம்


இந்த மாதிரி, 2 ரெண்டுங்கெட்டான் girls as guests at home for 3 months! அத்தகுடும்பத்தில எவ்வளவோ ரகசியமா பேசிஎங்கள ரொம்ப நெளிய வெச்சுகூசவெச்சுருக்கலாம்ஒரேயொரு தடவ கூட எங்களுக்கு தர்ம சங்கடம் வராம அந்தமொத்த குடும்பமும் அவ்வளவு அழகா விருந்தோம்பல் செய்தாங்கமறக்கமுடியல!


கண்ணா அண்ணா usual dialogues, “ஜெயஶ்ரீ....சலோ சலோ....கஹான்ஹை....எங்க வெச்சுட்ட நீ....பைசா??”  மன்னிஅடுப்படிலேர்ந்தே, “டீக் தரஹ்ஸே தேகோஅந்த பீரோல ரெண்டாவது shelf வெச்சேன்!” அண்ணா, “அம்மாநீ பாத்தியா?” அத்த, “என்ன எதுக்காக்கும் கேக்கறாய்எனக்கு தெரியாது!” அண்ணா, “ ஹேஜெயஶ்ரீகஹான் ரக்காரேகிதர் ஹை!!” மன்னிஅவசரஅவசரமாகைய்தொடச்சிண்டே வந்துஅலமாரிலேர்ந்து சரியா தான் சொன்னஎடத்திலேர்ந்துஅந்த பணக்கவர எடுத்துக்கொடுத்துட்டு, “ உங்குளுக்கு கண்ணுதெரியலயா” ன்னு சிரிச்சிண்டே மறுபடியும் kitchenனுக்கு போயிடுவாஅண்ணாசெத்த அசடு வழிஞ்சிண்டே, “நீ எதுக்கு அங்க வெச்ச?” னு கேட்டுண்டேஎங்கமுன்னாடியே பணத்த எண்ண்ஆரம்பிச்சுடுவார்!


குஸ்ஸாவுக்கு ஒரு ஒரு பைசாவுக்கும் அண்ணா கணக்கு சொல்லுவார்இல்லஇல்லகணக்கு சொல்றா மாதிரி பாவ்லா காட்டுவார். “என்னடா! 100 ரூபாகொறயறதே”. “இல்லயேநா இப்போ தானே எண்ணிணேன்ஷரியாபாருங்கோ!” குஸ்ஸா மறுபடி எண்ணி முடிக்கறதுக்குள்ளபாண்ட் ஷர்ட்பாக்கெட்டெல்லாம் தேடற மாதிரி பாவன பண்ணிட்டுமன்னி கிட்ட கண்ணகாட்டுவார்மன்னியும் குஸ்ஸா கவனிக்கறதுக்குள்ள எங்கேர்ந்தோ ஒரு 100 ரூபாநோட்ட அண்ணா கிட்ட கைல அழுத்திடுவாஅண்ணாரொம்ப இயற்கையா அதபாக்கெட்லேர்ந்து தொழாவி எடுத்த மாதிரிகுஸ்ஸா கிட்ட குடுத்து, “இப்போஷரியா இருக்கா?” ன்னு கேப்பார்குஸ்ஸாவும், “உம் உம்” அப்பிடிம்பார். So, மொதல் பாடம், “எப்படியாவது சமாளி!” இத்தனைக்கும் அண்ணா அந்தபணத்துல யாருக்காவது helpதான் பண்ணியிருப்பார்ஆனாகுஸ்ஸா எல்லாமேஅவர கேட்டுட்டு தான் பண்ணணும்னு எதிர் பார்க்கற டைப்!


இன்னொரு தடவஅண்ணா கொஞ்சம் குரல உசத்தி தன் பக்கம் இருந்தநியாயத்த எடுத்துச்சொன்னார்குஸ்ஸா முணுமுணுத்திண்டேஅடங்கிப்போயிட்டார்இரண்டாவது பாடம், “தேவப்பட்டாதடாலடியா குரலஉசத்து!”


நானோ நித்யாவோ இப்பிடியெல்லாம் குஸ்ஸாவ சமாளிக்க முடியுமாஎன்னநாங்க அண்ணா கிட்ட தான் பேசுவோம். He was very understanding. மன்னியும்எங்களுக்கு பெரிய ஆறுதல்எப்பிடியோ ஒரு இரண்டு வாரம் போச்சுஅப்போதான் எங்களுக்கு ஒரு ரொம்ப நல்ல சேதி வந்தது!


(தொடரும்)