Friday, March 19, 2021

பாம்பே டைம்ஸ் - பாகம் 6

 பாம்பே டைம்ஸ் - பாகம் 6


இந்த இடத்துலேர்ந்துகட்டாயமா நான் ஹிந்தி கலந்தேயாகணும்ஏன்னாஇப்போ பாம்பேல இருக்கோம்திராவிடர்கள் மன்னிக்கவும்


நான் பள்ளிக்கூடத்தில தமிழ் இரண்டாவது மொழியாக படிச்சிருந்தாலும்தனியாHindi Prachar Sabha போய் ஹிந்தில 3 பரீட்சை தேர்ச்சிப்பெற்றிருந்தேன்பிலானில மற்றும் டெல்லில கொஞ்சம் கொஞ்சம் பேசறதுக்கும்கத்துக்கிட்டிருந்தேன். So, கொஞ்சம் சுமாரா நல்லாவே பாம்பேலசமாளிச்சுட்டேன்பாம்பே ப்ராமண தமிழர்களோட தமிழக் கேட்டுஇருக்கீங்களாஅதுக்கு ஒரு தனி அகராதியே போடணும்


என் தம்பி wife பாம்பே தான்அவங்க வீட்லமொதல் மொதல்ல பொண்ணுபார்க்க போனப்போடிபன் சாப்பிட்டப்பறம்காப்பி குடுத்தாங்கஅவங்க அம்மாஎங்கிட்ட, “காயத்ரிஅடி மே ஷக்கர்ஆத்திக்கே பீயோ” அப்டினாங்ககொஞ்சம்decode பண்ணினப்பறம் தான் புரிஞ்சுதுஅதாவது, “தம்ளர்ல காப்பிக்கு சக்கரதனியா போட்டு இருக்கோம்அது அடில இருக்கும்காப்பிய டபாரால ஆத்திகுடி”. ஸ்ஸ்ஸ்ஸபா....


கதைக்கு வருவோம்!


குஸ்ஸா - அப்படின்னா கோபம்வேதி அத்த அத்திம்பேர்க்குநானும் நித்யாவும்வெச்ச பேரு தான் குஸ்ஸாபெயர் காரணம் என்னவென்றால்அத்த எப்போபார்த்தாலும், “அத்திம்பேர்க்கு இதுக்கு குஸ்ஸா வந்துடும்அதுக்கு குஸ்ஸாவந்துடும்அவர்க்கு நெறய குஸ்ஸா வந்தா கத்துவார்எல்லாத்தையும் தூக்கிபோட்டு உடைப்பார்குஸ்ஸா ஜாஸ்திகுஸ்ஸா வந்தா நாங்க எல்லாம்தொலஞ்சோம்” னு எங்க ரெண்டு பேர் கிட்டேயும் எப்பவும் குஸ்ஸாவின் கதைகளசொல்லி வளர்த்தா (!). Quite literally, அத்த எங்கள 3 மாசம் வளர்த்தாநாங்கபோய் 1 மாசம் வரைக்கும்குஸ்ஸா அவரோட மொதல் பெயன் வாசு (அண்ணாகூடபரோடாவில இருந்தார்ஒரு மாசம் கழிச்சுபாம்பே வந்தார்


அத்த சொல்லுவா, “அத்திம்பேர் வந்தாச்சுன்னாநீங்க எல்லாம் இப்பிடிகொட்டம் அடிக்க முடியாதுஅவருக்கு குஸ்ஸா வந்துடும்கார்த்தால சீக்கரமாஎழுந்துக்கணும் ராத்திரி சீக்கரமா தூங்கணும்இல்லன்னா அவருக்கு............” வாசகர்கள் கோடிட்ட இடத்தை நிரப்பவும்!


எனக்கும்நித்யாவுக்கும் செம tension. இப்போ திரும்பி guest house போறோம்னுசொல்லலாம்ஆனாசே சே அது அவ்வளவு நல்லா இருக்காது (எங்களுக்குஇப்போ நாங்க ருசி கண்ட சோம்பேறி பூனைகளாயிருந்தோம்). எப்பவும் போலபார்த்துக்கலாம்னு தெனாவட்டா இருந்தோம்


குஸ்ஸா வந்தப்பறம் ஒரு இரண்டு மூணு நாள்நாங்க நிஜமாவே பூன மாதிரி தான்ஆயிட்டோம்என்ன... மியாவ் மட்டும் தான் கத்தலஅதுவும்குஸ்ஸா ஆறடிஉயரம்ஆஜானுபாஹூதீர்க்கமான பார்வைகம்பீரமானஆழமான குரல்வெள்ள வெளேர்னு பெரிய தாடிநாங்க total கப்சிப்!


இந்த மௌனமான நேரங்கள எப்படி ஒடச்சோம்யாரு help பண்ணிணாஅதுவும் சுவாரஸயமா....


(தொடரும்)




பாம்பே டைம்ஸ் - பாகம் 5

 பாம்பே டைம்ஸ் - பாகம் 5


எனக்கும் நித்யாவுக்கும் ஒரு 6 மாசமாதான் பழக்கம் ஆனாகண்டதும் காதல்மாதிரிஎனக்கு அவள பார்த்த உடனே பிடிச்சுடுத்து. I am still not sure if the other way is the same 😊எங்க இரண்டு பேருக்கும் இந்த 6 மாச ஸ்னேகத்திலநெறய ஒத்துமைகள் இருக்குன்னும்அதவிட ஜாஸ்தி வேத்துமைகள் இருப்பதும்தெரிஞ்சுதுஆனா, we both accepted each other the way we are அப்படிங்கறதுதான்இன்னி வரைக்கும் எங்க நட்பு நெலச்சு நிக்க மிக பெரிய காரணம்எங்கமுக்கியமான ஒத்தும, our love for filter coffee. சாதாரணமா காப்பின்னு எழுதிவச்சாலேஅதப்பார்த்து பரவசம் அடையற டைப் இரண்டு பேரும்


மன்னி எங்கக்கிட்ட, “காப்பி குடிப்பீங்களா?” ன்னு கேட்ட உடனே, “இங்கசந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே...” dialogue தான் ஞாபகம் வந்ததுஇரண்டு பேரும் அசடு வழிஞ்சிண்டு தலயாட்டினோம்ஒரு 5 நிமிஷத்துலஆவிபறக்கநொற பொங்கஒண்ணாங்களாஸ் பில்டர் காப்பிடபரா தம்ளர்ல!!! கண்ல ஆனந்த்கண்ணீரோட மன்னி அப்படியே ஒரு மதர் தெராசாவாஒருமங்கையர் குல மாணிக்கமாஒரு தேவதையா தெரிஞ்சா!!! கண்ணதொடச்சிண்டு அந்த காப்பிய காதலோட 10 நிமிஷம் ஒண்ணும் பேசாமஅனுபவிச்சுருசிச்சு குடிச்சோம்காப்பிய முடச்சப்போவாழ்க்கைலமிகப்பெரியத்தீர்மானமும் எடுத்தேன்நித்யாவப் பார்த்தேன்எங்கள் கண்கள்பேசின. “Guest house  இப்பிடி ஒரு காப்பி கெடச்சு இருக்குமா?”  அதுக்குஅவ, “சான்ஸ்ஸே இல்ல!”  What else matters! வேற ஒண்ணுமே வேண்டாம்மன்னிஉங்களுக்கு இந்த நிமிஷத்துலேர்ந்து நாங்க அடிமை!


கொஞ்சமா தைரியத்த வரவழச்சிண்டுஅண்ணா கிட்ட கேட்க நெனச்சதமெதுவா கேட்டேன். “அண்ணாநீங்க என்ன பார்த்ததே இல்லியேஎப்பிடிஎங்கள ஸ்டேஷன்லஅந்த ஜன சமுத்திரத்துல அடையாளம் கண்டு பிடிச்சீங்க?” அண்ணா அவரோட ஸ்டைல்ல, “நீங்க ரெண்டு பேரும் தான் திருதிருன்னுமுழிச்சிண்டு இருந்தீங்களேயார் வேணாச்சொல்லிடுவாஅத்த வேற பழையஆல்பத்திலேர்ந்து நீ மகாலிபுரத்துல எடுத்திண்ட photo காமிச்சாஅதுக்கெல்லாம் அவசியமே இருக்கல!” அத்தையும்மன்னியும் இதக்கேட்டுபயங்கரமா சிரிச்சாமானம் gone once more!


வீடு 500 சதுர அடிஒரு குளியலறைஓரேயோரு படுக்கையறைசமயக்கட்டுஒருமிகச்சின்ன வராண்டாஅவ்ளோதான்அந்த 3 மாசம் அத்தஅண்ணா & மன்னிஎங்களுக்கு ஒரு மிக பிரம்மாண்டமான மாளிகை வாழ்க்கையைக் கொடுத்தாஇன்னி வரைக்கும் மறக்க முடியாத ஒரு 3 மாசம் அது


அண்ணா கோபக்ககாரரோன்னு நான் பயந்ததெல்லாம் அப்பறம் தான்தெரிஞ்சுதுஅவருக்கு நடிக்கறதுக்கு ரொம்ப பிடிக்கும்னுஎனக்கு சின்னவயசுலேர்ந்தே அண்ணான்னு ஒரு உன்னதமான உறவு இல்லையேன்னு ரொம்பவருத்தப்பட்டுருக்கேன்கண்ணா அண்ணாவோட உண்மையான அன்புல தான்எனக்கு புரிஞ்சுது, “கூடப்பிறந்தா தான் அண்ணாவா?” 


தினமும் காலைல எழுந்துக்கறத்துலேர்ந்து ராத்திரி தூங்கப்போகற வரைக்கும், office லேயும் சரவீட்லேயும் சரி எவ்வளவு கத்துகிட்டேன்அந்த அளவு மகிழ்ச்சிபின் நாட்களில் நீடிக்க ஒரு அம்மாவா எப்பிடி இருக்கணும்ஒரு அத்தையாஒருமனைவியாஒரு மருமகளா... இந்த எல்லா பாடத்தையும் அத்தையும்மன்னியும்அவங்க நடந்துக்கிட்ட விதத்துல நான் கத்துக்கிட்டேன்மன்னியோட டோக்ளாபுலவ்தோசை-சட்னிசாம்பார்-இட்லிபூரி-சென்னா... இப்பிடி அடுக்கிண்டேபோகலாம். 8 மணிக்கு தான் கார்த்தால கஷ்ப்பட்டு எழுந்திருப்போம்பல்லுக்கூடதேய்க்காம மொதல்ல ATN ன்னு ஒரு சானல்ல வரிசையா ஹிந்தி பாட்டாபோடுவான்நித்யாவுக்கு ஹிந்தின்னா உயிர்ஆனா பேச வராதுஷாருக்கான்னாஅவ காப்பியக்கூட தியாகம் பண்ணிடுவாநான் ஹிந்தி சுமாரா பேசுவேன்எங்கவீட்ல ஹிந்தி பாட்டெல்லாம் அவ்வளவா கேட்க மாட்டோம் ஆனா நான் பிலானிநாட்கள்ள நெறய கேட்டு இருக்கேன்நான் ஸல்மான் fan!


விடியும்போதே எங்க இந்த கட்சி பூசல்ல தான் விடியும்அண்ணாவுக்குஎங்களோட இந்த சண்டையைல்லாம் ரொம்ப பிடிக்கும்ஆனாஅவர் கார்த்தாலமணிலேர்ந்து 1 அவர் (அதாவது நாங்க எழுந்துக்கற வரைக்கும்) newspaper படிச்சிண்டு இருப்பார்மன்னியும்அத்தையும் kitchen பிஸியா இருப்பாநாங்கதிருப்பள்ளியழுச்சி ஆன அப்பறம் தான் அண்ணா ஹாலுக்கே வருவார்நாங்கரெண்டு பேரும் மெதுவா பல்லு தேச்சு ஆவி பறக்கறக்காப்பி ஹிந்திபாடல்களோடு ரசிச்சு குடுச்சு, breakfast எல்லாம் திவ்யமா சாப்டுட்டுஅவசரமேஇல்லாம ஆர அமர office க்கு ஒரு 10 மணிக்கு கெளம்புவோம்


சாயந்திரம் 7 மணிக்கு திரும்பி வந்தா தினமும் ஒரு திரைப்படம்செம கலாட்டாசிரிப்புஅரட்டக்கச்சேரிநல்ல சாப்பாடு


இந்த அட்டகாசத்தயெல்லாம் அடக்க வந்தார் ஒருத்தர்அவருக்கு நாங்க வெச்சபேரு... குஸ்ஸா... அப்பிடின்னா???


(தொடரும்)

பாம்பே டைம்ஸ் - பாகம் 4

 பாம்பே டைம்ஸ் - பாகம் 4


அண்ணா பின்னாடியே ஓடிப்போன கண்டி பின்னாடி நித்யாவும்நானும் ஓட்டமும்நடையுமா போனோம்கண்டி அசடு வழிஞ்சிண்டேஅண்ணா கிட்டஅவர் வீடுஎங்கேனு முதல்ல விசாரிச்சுதுஅவரும் ரொம்ப இயல்பா, Worliனு சொன்னார்உடனேகண்டி, “ எங்க office போற வழில தான். Dadarஅப்பிடியேஎன்னையும் வழில drop பண்ணிடறீங்களா?” ன்னு வெட்கமே இல்லாமகேட்டுட்டு,இதுவே ஒரு taxi கைக்காட்டிநிறுத்திமுன் சீட்ல போய்உட்காரவும் செஞ்சுஎங்க மானத்த ஒரேடியா வாங்கித்துநித்யாவும்நானும்எங்க பல்ல நறநறன்னு கடிச்சதுஅந்த ஜென்மத்துக்கு புரிஞ்சுதானே தெரியலநானே pile on. நித்யா ஏற்கனவே எக்கசக்க சங்கோஜி... இதுக்கு நடுவுல இவன்வேற...


அண்ணா எங்க பொட்டி எல்லாம் boot வெச்சுட்டுஅதுங்கிட்ட போய், “You sit with the girls at the back” னு சொல்லிஅதயும் ஏத்திண்டு கெளம்பினோம்எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலவெளில வேடிக்க பார்க்கற சாக்குலகொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே பாம்பேய ரசிச்சேன்அப்பப்போ, “அது என்னஇடம்?, இது என்ன இடம்னு அண்ணாக்கிட்ட பேச்சு குடுக்கறதுக்காககேட்டுக்கிட்டு வரும் போதுகண்டிநடுவுல நடுவுல பூந்துவிளக்கவுரை வேறஅவன் ஏதாவது பேசினாலேநானும் நித்யாவும்அவன எறிச்சிடற மாதிரிபார்ப்போம்ஒரு வழியா அத Dadar office இறக்கிவிட்டுட்டுநாங்க Worliக்குகெளம்பினோம்


வழில அண்ணா கிட்ட எவ்வளவோ hint குடுத்தேன்எங்களுக்கு எவ்வளவுசங்கடமா இருக்குநாங்க எவ்வளவு கஷ்டம் குடுக்கறோம்இத்யாதிஇத்யாதிஇத்யாதி... அண்ணா ஒண்ணும் சரியா பதிலே சொல்லலமறுபடியும்உச்சஸ்தாயில, “நீ வந்து ஒன் அத்த கிட்ட ச்சொல்லிட்டு என்ன வேணுமோபண்ணிக்கோயேன்என் கிட்ட என்னத்துக்காக்கும் ச்சொல்றாய்?”


Worli வந்து Jamboori Maidan கிட்ட அண்ணா taxi driver கிட்ட left திரும்பச்சொன்னார்ஒரு colonyக்ககுள்ளஒரு பழைய அடுக்கு மாடிகட்டடத்துக்கு முன்னாடி, taxi நின்னுதுநான் taxiக்கு பணம்கொடுக்கப்போனேன்மறுபடியும் அண்ணா குரல உசத்தி, “உங்காத்துல உனக்குமரியாதயேச் சொல்லித்தரலியா?! எப்பிடி பெரிவா இருக்கும்போது நீ உன்purse  எடுக்கலாம்உள்ள போ! 3rd floor. அத்த காத்திண்டு இருப்பா” ன்னுஅதட்டிட்டு, taxiக்கு பணம் கொடுத்திட்டு, luggage எல்லாம் எடுத்திண்டு உள்ளபோறோம்எனக்கு கண்ல தண்ணியே வந்திருச்சுநம்ம செலவு நம்மபார்த்துக்கணும்னு நெனச்சாஇவர் இப்பிடி திட்றாரே... அத்தய பார்த்ததும்ன்னு கட்டிண்டு அழனும் போல இருந்துதுஅடக்கிண்டுநாத்தழுக்க, “சௌக்கியமாஅத்த?” ன்னு மட்டும் தான் கேட்க முடிஞ்சுது


அத்த பார்க்கறதுக்கு ஒரு சின்ன size MS மாதிரி இருப்பாபாங்கா ஒரு ஆறு கஜபுடவைலமூக்கு இரண்டு பக்கமும் குத்திபள பளன்னு வெள்ள கல் பதிச்சமூக்குத்திஅழகா நெத்தில பெரிய குங்குமம்தன்னோட தும்பப்பூ தலமுடிலசின்னதா ஒரு கொண்டஅகலமான அழகான வரவேற்க்கர சிரிப்புஇனிமையும்எளிமையான சுபாவம்குரல் மட்டும் தான் கொஞ்சம் சின்னதும் பெரிசுமா வரும். Easy அத்த கிட்ட தாஜா பண்ணிஇப்பவே ஒரு இரண்டு அவர்ல கிளம்பிடனும்


அப்போ தான் கவனிச்சேன்அத்தைக்கு பின்னாடிஅழகா பளிச்னு சிரிச்சிண்டுஇரட்ட நாடிலஆஜானுபாஹுவா, salwar kameez போட்டுண்டுஒரு 30-32 வயசுலஒரு பெண்நான் இதுவரைக்கும் பார்த்ததில்லஆனாஎங்கக்கா இவள பத்திபேசியிருந்தாகெளம்பறதுக்கு முன்னாடி, Madrasஎங்கப்பா எங்கள வேதிஅத்த ஆத்துல தங்கணும் கட்டாயப்படுத்தினப்போநான் ரொம்ப பிடிவாதம்பிடிச்சேன். “எனக்கு அவா யாரையுமே தெரியாதுஸ்டேஷன்ல கண்ணா அண்ணாவந்தாக்கூட எனக்கு அடையாளம் தெரியாதுஉனக்கு வேணா உங்க அக்காஉசத்தியா இருக்கலாம்நான் comfortable  feel பண்ண வேண்டாமாஅதுவும்மாசம்!!” இதுக்கு எங்கக்கா சொன்னா, “நீ அங்க போஅங்க ஜெயஶ்ரீ மன்னிகண்ணா அண்ணா wife இருப்பாரொம்ப நல்லவ. You will really like her. ரொம்ப பிரமாதமா சமைப்பா. She will be great company for you!” இதெல்லாம்என் மனசுல வந்திட்டு போச்சுஇது தான் மன்னியா? Ok. 


அறிமுகமெல்லாம் ஆன அப்பறம்மன்னி கேட்ட முதல் கேள்விஅதுக்குஎங்களுக்கு கிடைச்ச நல்ல பதில்தங்கினா இனிமேஇந்த 3 மாசம் அவங்கவீட்ல தான் தங்கணும்னு நாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில தீர்மானிச்சஅந்த கேள்வி.... நாளை!


(தொடரும்)