விப்ரோ நிறுவனம் சேர்ந்து ஒன்றரை மாதங்கள் நகர்ந்து விட்டன. அன்று 20th Feb. நரஸி என்று ஒரு விப்ரோ நண்பர் என்னை போன்ல கூப்பிட்டார். இன்னும் ப்ரொஜெக்ட் தொடங்காதபடியால் பயங்கர free ஆக இருந்தேன். நரஸி எடுத்தவுடன், "GD, நாம Pen & Paper Club ன்னு ஒண்ணு ஆரம்பிக்கப்போறோம். எழுதறவங்கள ஊகுவிக்க. அதுக்காக நாளைக்கு ஒரு inauguration. Chief Guest ஆ எழுத்தாளர் திருமதி. அனுராதா ரமணண் மேடமை கூப்பிட்டு இருக்கோம்.அவங்களை அவங்க வீட்லேர்ந்து கூட்டிகிட்டு வரணும். முதல்ல நம்ம ஷங்கர் தான் போறதா இருந்தார். ஆன திடீர்னு அவருக்கு எதோ அவசர வேல வந்திடுச்சு. அதனால உங்கள request பண்ணிக்கலாம்னு..." நரஸி இன்னும் வாக்கியத்த முழுசா முடிக்கவே இல்ல அதுக்குள்ள நான், "என்ன நரஸி இது? கரும்பு தின்ன கூலியா? நான் எதுக்கு இருக்கேன்? Just leave it to me, I say!" நரஸிக்கு சந்தோஷம். என்னக்கோ அதுல double!!!
மேடம்மைப்பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். அவரோட சில சிறுகதைகளை ரசித்துப்படிசிருக்கேன். என்னுடைய "மிக உயர்ந்தவர்கள்" பட்டியலில் அவரும் ஒருவர். அவரோட பாதி நாள் இருக்கணும்! Wow! What a life-time opportunity!!
மதியம் 3 மணிக்கு மேடம்மை phone ல கூப்பிட்டேன். என்னை அறிமுகப்படுத்திகிட்டு, வீட்டுக்கு வழி எல்லாம் கேட்டு வெச்சுக்கிட்டேன். Needless to say, I was excited!
21st Feb:
காலைல எழுந்திருக்கும் போதே ஒரு விறுவிறுப்பு...என்னிக்கும் இல்லாத ஒரு சுறுசுறுப்பு. Correct ஆ 9:10க்கு நான் மேடம் வீட்டு வாசல்ல! (9:00 மணிக்கு தான் வரேன்னு சொல்லி இருந்தேன்...பாழாய்ப்போன traffic க்கு என்னோட பதட்டம் புரியலேயே! சே!!). மேடம் sofa ல உட்கார்ந்து இருந்தாங்க. She looked dazzling!
நேரா போய் முதல்ல அவங்க காலத்தொட்டு கண்ணுல ஒத்திக்கிட்டேன் (Actualலா அவங்க கையைத்தான் முதல்ல கண்ணுல ஒத்திக்கிட்டு இருக்கணும்). மேடம் coffee குடிக்கிறியான்னு கேட்டாங்க. As such, நான் ஒரு coffee பைத்தியம். அதுல, மேடம் வீட்டில, அவங்க கையால coffee ன்னா, கேக்கணுமா? வேண்டாம்ணு சொல்லத்தோணல. ஒரு கப் coffee குடுச்சிட்டு, நாங்க office க்கு கெளம்பினோம். வழில போகும்போது அவரோட படைப்புகளைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும் நிறைய ஆவலோடு கேட்டுக்கிட்டே வந்தேன். என் குடும்பம், வாழ்க்கையைப்பற்றியும், மேடமும் பொறுமையொடு கேட்டுகிட்டே வந்தாங்க. இப்போ அதே traffic ஐ வாழ்த்தினேன். ஆனா, அரை மணி நேரம், அரை நொடியாப்போச்சு!
Office ல படி ஏறும்போது, என் கையைப்பிடிச்சிக்கிட்டு மேடம் ஏறினாங்க. பல ஆயிரம் இதயங்களை தன் எழுத்தால கவர்ந்த அந்தக்கை, இதோ, மெத்துன்னு, என் கைக்குள்ள, அடக்கமா! God! I am gifted!!
Function ரொம்ப நல்லா நடந்தது. மறுபடியும் மேடம்மை வீட்டுல கொண்டுப்போய்விட்டேன். நமஸ்காரம் செஞ்சேன்.குங்குமம் கொடுதாங்க. மேடம் எழுதின 3 முத்தான புத்தக பொக்கிஷங்களை, அவங்க கையெழுத்துப்போட்டுக் கொடுத்தாங்க. Office ல நரஸிக்கிட்ட இத சொன்னபோது, அவர் உடனே, "பரவாயில்லியே! கரும்பு தின்ன கூலியும் கிடச்சிடுச்சே, உங்களுக்கு!" அப்படின்னார்.
வாழ்க்கைல எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம், ரசிக்கிறோம். பல சம்பவங்கள் இனிமையா நம்ம மனசில பதியுது. அப்பிடிப்பட்ட ஒரு 'பெரிய' மனுஷிய பார்த்து, ரசித்த இனிமையான சம்பவமா இது என் வாழ்க்கைல இருக்கும். மறக்கமுடியாது!
அனுராதா ரமணணிடமிருந்து அந்த அரை நாளில் நான் கற்றது:
1) வாழ்க்கைல எவ்வளவு உயரப்போனாலும், எளிமையா இருக்கணும், இனிமையா பழகணும். "நிறை குடம் தளும்பாது" அப்படிங்கறதுக்கு மேடம் ஒரு எடுத்துக்காட்டு.
2) அவருக்கு எத்தனையோ உடல் உபாதைகள். ஆனாலும் அந்த மாறாத புன்சிரிப்பு. "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று சொல்வதுப்போல்.
3) மேடம்மோட ரசிப்புத்திறன். கூர்மையான கவனம். எல்லா படைப்பாளிகளுக்கும் தேவையான குணாதிசையங்கள்.
உயரப்பறந்தாலும், எளிமையா வாழ்ந்து, துன்பம் வந்தாலும் வராவிட்டாலும் எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் ஒரேப்போல ரசிக்கும் திறன், நம்மாலும் முடியுமா? தெரியலை! முயற்சி பண்ணலாம்...தப்பில்ல!!
இஷா யோகா - தமிழ் போராளிகள்
5 years ago
No comments:
Post a Comment